ரோடியம்(III) புரோமைடு
ரோடியம்(III) புரோமைடு (Rhodium(III) bromide) என்பது பொதுவாக RhBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆனால் இம்மூலக்கூற்று வாய்ப்பாடு RhBr3(H2O)n என்ற பொதுவாய்ப்பாட்டல் அடையாளப்படுத்தப்பட்டுகிறது. இங்குள்ள n = 0 அல்லது தோராயமாக 3 ஆக இருக்கும். இவ்விரு வடிவங்களுமே பழுப்பு நிறத் திண்மங்களாகும். நீரேற்று வடிவம் நீரிலும் ஆல்ககால்களிலும் கரைகிறது. ரோடியம் புரோமைடு அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பில் இது பயன்படுகிறது. ரோடியம் புரோமைடுகள் குளொரைடுகளை ஒத்திருக்கின்றன என்றாலும் இவை வர்த்தக அளவிலும் ஆய்வு நோக்கிலும் சற்று கூடுதலான கவனத்தை ஈர்க்கின்றன. கட்டமைப்புரோடியம்(III) புளோரைடின் கட்டமைப்பு அலுமினியம் குளோரைடு சேர்மத்தின் படிகக் கட்டமைப்பை ஒத்திருக்கிறது..[2][3] வினைகள்மற்ற ரோடியம் ஆலைடு உப்புகளைத் தயாரிக்க உதவும் தொடக்க வேதிப் பொருளாக ரோடியம்(III) புரோமைடு பயன்படுகிறது. உதாரணமாக புரோமின் முப்புளோரைடுடன் வினையில் ஈடுபட்டு ரோடியம்(IV) புளோரைடு சேர்மத்தைக் கொடுக்கிறது. நீரிய பொட்டாசியம் அயோடைடுடன் வினையில் ஈடுபட்டு ரோடியம் முப்புளோரைடு சேர்மத்தைக் கொடுக்கிறது. மற்ற ரோடியம் டிரை ஆலைடுகள் போலவே நீரற்ற ரோடியம்(III) புரோமைடும் தண்ணீரில் கரையாது. ரோடியம் உலோகம் ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் புரோமினுடன் வினைபுரிய நேர்ந்தால் இருநீரேற்று (RhBr3·2H2O ) உருவாகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia