ரோமியோ (2024 திரைப்படம்)
ரோமியோ (Romeo), 2024ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். விநாயக் வைத்தியநாதன் என்பவர் திரைக்கதை எழுதி இயக்க, விஜய் ஆண்டனி மகள் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.[1] இதில் விஜய் ஆண்டனி, மிருணாளினி இரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையை பரத் தனசேகர், இரவி ராய்ஸ்டர் என்ற அறிமுக இசையமைப்பாளர்கள் செய்துள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை ஜே. பரூக் பாசா, விஜய் ஆண்டனி ஆகியோர் கையாண்டுள்ளனர்.[2][3] மலேசியா, பேங்காக், ஐதராபாத்து, பெங்களூர், தென்காசி, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.[4] இத்திரைப்படம் 11 ஏப்ரல் 2024 அன்று ரமலான் தினத்தினையொட்டி வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து நல்ல மதிப்புரைகள் கிடைத்தன.[5] நடிகர்கள்
தயாரிப்புஆகத்து 16, 2023 அன்று, விஜய் ஆண்டனி தனது புதிய தயாரிப்பு நிறுவனமான குட் டெவில் புரொடச்சன்சைத் தொடங்கியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது, இந்நிறுவனம் அறிவிக்கப்பட்ட நாளன்று இத்திரைப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டியும் வெளியிடப்பட்டது.[6] வெளியீடுதிரையரங்குஏப்ரல் 11 அன்று திரையரங்குகளில் லவ் குரு என்ற பெயரில் தெலுங்கு மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.[7] விநியோகம்இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீசு நிறுவனம் வாங்கியுள்ளது.[8] வெளிநாடு உரிமைகள் ஐங்கரன் இண்டர்நேசனல், அருண் பாண்டியனின் ஏ & பி குரூப்ஸ் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளன.[9][10] ஆந்திர, தெலுங்கானா விநியோக உரிமைகள் மைத்ரி மூவி மேக்கர்சு வாங்கியுள்ளது.[11][12] கர்நாடகாவில் விநியோக உரிமையை ஓம்பலே பிலிம்சு வாங்கியுள்ளது.[13] மேலதிக ஊடக சேவைஅமேசான் பிரைம் வீடியோ, ஆஹா ஆகிய ஓடை ஒலிபரப்பு தளங்களுக்கு இணைய ஒளிபரப்பு உரிமம் விற்கப்பட்டுள்ளது, செய்மதித் தொலைக்காட்சி உரிமம் விஜய் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டுள்ளது.[14][15] வரவேற்பு"ரோமியோ விஜய் ஆண்டனியின் அண்மைக்காலப் படபடப்புகளில் இருந்து மிகவும் அவசியமான ஒரு விலகலாகவும், உணர்வுப்பூர்வமாக மகிழ்ச்சியளிக்கும் தருணங்களில் ஒரு கண்ணியமான காட்சியை உருவாக்குவதாகவும் உள்ளது" என தி இந்து கோபிநாத் இராசேந்திரன் எழுதியுள்ளார்.[16] சினிமா எக்சுபிரசின் ஜெயபுவனேசுவரி 3/5 மதிப்பெண்கள் அளித்து பின்வருமாறு எழுதியிருக்கிறார்: "நாளின் முடிவில், ரோமியோ ஒரு மகிழ்ச்சியான முடிவைக் கொண்டுள்ளது, இது ஒரு நீண்ட வார இறுதியில் குடும்பங்கள் பார்க்கக்கூடிய தரமான படமாக இருக்கிறது. குறைந்த பட்சம் இது சேக்சுபியர்ரின் ரோமியோ ஜூலியட் போல் சோகமானது அல்ல."[17] "விஜய் ஆண்டனி, பல வகை உணர்ச்சிகளை வெளிப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார். மிருணாளினி உணர்ச்சி நடிப்பில் சற்று மெருகேறி இருந்தாலும் அவர் கதாபாத்திரம் வலுவற்றதாக இருப்பதால் உரிய தாக்கம் செலுத்தத் தவறுகிறார். மிருணாளினியின் நண்பராக வரும் ஷா ராவும் விஜய் ஆண்டனிக்கு உதவும் யோகிபாபுவும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். பரத் தனசேகர் இசையில் பாடல்கள் பரவாயில்லை." என்று இந்து தமிழ் திசை எழுதியுள்ளது.[18] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia