லட்சுமி (2018 திரைப்படம்)
லட்சுமி (Lakshmi) 2018 இல் வெளிவந்த இசை மற்றும் நடனத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எல். விஜய் இதை எழுதி இயக்கியுள்ளார். தித்யா பாண்டே படத்தின் தலைப்புப் பாத்திரத்தில் பிரபுதேவா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் சல்மான் யூசூப் கான் மற்றும் கருணாகரன் ஆகியோரும் துணைக் கதாப்பாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருந்தனர். பிரமோத் பிலிம்ஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் பதாகையின் கீழ் பிரதீக் சக்ரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா மற்றும் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் தயாரித்திந்தனர். இப்படத்தின் இசையமைப்பை சாம் சி. எஸ் மேற்கொள்ள ஒளிப்பதிவை நீரவ் ஷா மேற்கொண்டார். 2018 ஆகஸ்ட் 24 அன்று லட்சுமியைக் கொண்டாடும் வரலட்சுமி நோன்பு அன்று வெளியிடப்பட்டது.[1] கதைச்சுருக்கம்10 வயதான லட்சுமி என்ற பெண் நடனத்தையே தனது மூச்சும் வாழ்வுமாகக் கொண்டுள்ளாள். மேலும் தேசிய அளவில் நடனத்தில் முதலிடத்தை அடைய வேண்டுமென கனவுடன் வாழ்கிறாள். இருப்பினும், அவளது தாய் நந்தினி இவளது இசை மற்றும் நடனத்தை வெறுக்கிறார். விரைவில், லட்சுமி தனது பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு விடுதியில் உள்ள மக்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறாள். கடையில் வாசிக்கும் இசைக்காக லட்சுமி அங்கே அடிக்கடி சென்றாலும், விரைவில் அவள் அங்கே வழக்கமானவளாக மாறிவிடுகிறாள். விஜய் கிருஷ்ணா என்கிற வி. கே அவளது நடன அசைவுகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு அவளை வரவேற்கிறார். லட்சுமி வி. கே. யின் அனுதாபத்தைப் பெறுகிறார். மேலும் வி. கேவை தனது தந்தையாகக் காட்டிக் கொண்டு தனது கனவுகளை அடைய உதவ வேண்டும் என்ற அவளது கோரிக்கையை அவர் ஏற்றுக்கொள்கிறார். தாய் நந்தினிக்குத் தெரியாமல் போட்டியில் பங்கேற்கும் பொருட்டு சென்னை நடன அகாடமியில் சேருகிறார். லட்சுமி தனது நடனத்தின் மூலம் அகாடமியில் உள்ள அனைவரையும் கவர்ந்திழுக்கிறார், மேலும் நடனக் கலைஞர்களான அர்ஜுன் மற்றும் அர்னால்டு ஆகியோரைக் கவர்ந்திழுக்கிறார். அங்கே லட்சுமி நடனப்போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றாரா? என்பது மீதிக் கதையாகும். நடிகர்கள்பிரபுதேவா - விஜய் கிருஷ்ணா "வி.கே", லட்சுமிக்கு உதவும் நடன பயிற்றுவிப்பாளராக தயாரிப்பு2017 செப்டம்பர் ஏ. எல். விஜய் மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரும் ஒரு புதிய படத்திற்கான தயாரிப்பு பணிகளைத் தொடங்கினார். இது தேவியின் (2016) தொடர்ச்சியாக இருக்கும் என்ற அறிக்கைகளை மறுத்தனர். 2017 செப்டம்பர் 22 அன்று ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இத்திரைப்படம் தொடங்கப்பட்டது. நீரவ் ஷா ஒளிப்பதிவாளாக ஒப்பந்தமானார். சாம் சி எஸ் இசையமைப்பை மேற்கொள்ள மற்றும் ஆண்டோனி படத்தொகுப்பை மேற்கொண்டார் பிரமோத் பிலிம்ஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் பதாகையின் கீழ் பிரதீக் சக்ரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா மற்றும் ஆர். ரவீந்திரன் ஆகியோர் தயாரித்திருந்தனர்.[2][3][4] குழந்தைகளுக்கான நடன ஆதர்சனமான வர்ணிக்கப்படும் பிரபு தேவாவுடன், இந்தி ரியாலிட்டி டான்ஸ் ஷோவின் சூப்பர் டான்சர் வெற்றியாளரான குழந்தை நடனக் கலைஞரான தித்யா பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் பணியாற்றினார். அக்ஷத் சிங் மற்றும் ஜீத் தாஸ் உள்ளிட்ட பிற இளம் நடனக் கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றினர்.[5][6] 2018 பிப்ரவரி 6 அன்று படத்தின் படபிடிப்பு முடிந்தது. தயாரிப்பாளர்கள் பிரபு தேவாவுக்கு அவருடைய ஒரு பெரிய ஓவியத்தை பரிசளித்தனர்.[7] வெளியீடுபடத்தின் தயாரிப்பு பட்ஜெட் மதிப்பு இந்திய ரூபாயில் 12 கோடியாகும்.[8] 2018 ஆகஸ்ட் 24 அன்று இப்படம் வெளியானது. படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்கப்பட்டன.[9] ஒலிப்பதிவு
இதன் ஒலிப்பதிவை சாம் சி. எஸ் மேற்கொண்டு ஏழு பாடல்களையும் எழுதியுள்ளார்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia