வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம்
வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம் (Asiatic Society of Bangladesh) என்பது 1864 ஆம் ஆண்டின் சங்கங்களின் சட்டம் மற்றும் வங்காள தேச அரசாங்கத்தின் அரசு சாரா அமைப்பு விவகார பணியகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு அரசியல் மற்றும் இலாப நோக்கற்ற ஆராய்ச்சி அமைப்பாகும். [2] இச்சமூகம் பல முஸ்லிம் தலைவர்களால் 1952 இல் டாக்காவில் கிழக்கு பாக்கித்தானின் ஆசியச் சமூகமாக நிறுவப்பட்டது. பின்னர், 1972 இல் மறுபெயரிடப்பட்டது. பாக்கித்தானின் புகழ்பெற்ற இசுலாமிய வரலாற்றாசிரியரும், தொலியல் ஆய்வாளருமான அகமது அசன் தானி இந்த சமூகத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு வங்காள மொழியியலாளர் முகமது சாகிதுல்லா உதவி செய்தார். பழைய டாக்காவில் உள்ள டாக்கா பல்கலைக்கழகத்தின் கர்சன் மாளிகையிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் நிம்தாலியில் இந்த சமூகத்தின் அலுவலகம் உள்ளது. [3] வரலாறுவங்காளதேசத்தின் ஆசியச் சமூகம், 1784 இல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் நிறுவப்பட்ட ஆசியச் சமூகத்திலிருந்து அதன் தோற்றத்தைக் குறிக்கிறது [4] இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, ஆசியச் சமூகத்தின் சில அறிஞர்கள் கிழக்கு வங்காளத்தின் தலைநகரான டாக்காவுக்குச் சென்றனர். [5] டாக்கா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான அகமத் அசன் தானி, டாக்காவில் ஒரு ஆசிய சமூகத்தை நிறுவும் யோசனையை முன்மொழிந்தார். இது டாக்காவில் உள்ள அறிஞர்களால் பரவலாகப் பாராட்டப்பட்டது. [5] அகமத் அசன் தானி, அபு முகமது அபிபுல்லா, அப்துல் கலீம், அப்துல் அமீது, இத்ரத் உசைன் சுபேரி, ஜே. எஸ். டர்னர், கான் பகதூர் அப்துர் ரகுமான் கான், முகம்மது சாகிதுல்லா, சையது மோசம் உசைன், சேராஜ் உசைன், சேராஜ் அக் , சையது முகம்மது தைபூர், மற்றும் டபிள்யு. எச். ஏ. சதானி ஆகியோரால் 1952 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி பாக்கித்தானின் ஆசியச் சமூகம் நிறுவப்பட்டது. [5] கொல்கத்தாவில் உள்ள ஆசியச் சமூகத்தைப் போலவே அமைக்கப்பட்ட இச்சமூகம் இரண்டு வருட காலவரையறை கொண்ட 17 உறுப்பினர் நிர்வாகக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. [5] பணிகள்செப்டம்பர் 2013 இல், வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம் வங்காளப்பீடியாவின் சிறு பதிப்பை வெளியிட்டது. [6] டாக்கா பல்கலைக்கழகத்தில் இரண்டு பேராசிரியர்களின் பணிகளில் கருத்துத் திருட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து, வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம் நவம்பர் 2020 இல் அவர்களின் மானியத்தை ரத்து செய்தது. [7] அருங்காட்சியகம்ஆசியச் சமூகத்தின் பழங்காலப் பொருட்களின் அருங்காட்சியகம் பழைய டாக்காவில் அமைந்துள்ளது. [8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia