வடக்கு போர்னியோ மொழிகள்
வடக்கு போர்னியோ மொழிகள் (மலாய்: Bahasa-bahasa Borneo Utara Raya; ஆங்கிலம்: North Borneo Languages; சீனம்: 大北婆羅洲語群) என்பது ஆஸ்திரோனீசிய மொழிகள் குடும்பத்தில் முன்மொழியப்பட்ட ஒரு துணைக்குழு ஆகும். இந்தத் துணைக்குழு, வரலாற்று அளவில் போர்னியோவின் பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிகளை உள்ளடக்கியது. மேலும் சுமத்திரா, ஜாவா இந்தோசீனா கடல்சார் தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3] முன்மொழியப்பட்டுள்ள இந்தத் துணைக்குழுவானது, மலாய மொழிகள் தொடர்புடைய மலாய் மொழி, இந்தோனேசிய மொழி, மினாங்கபாவு மொழி, பஞ்சார் மொழி இபான் மொழி போன்ற தென்கிழக்கு ஆசியாவின் சில முக்கிய மொழிகளை உள்ளடக்கியது. அத்துடன் சுண்டா மொழி, ஆச்சே மொழி எனும் இந்தோனேசியாவின் மொழிகளையும் உள்ளடக்கியது.[4][5] பொதுபோர்னியோ. சபா மாநிலத்தின் டூசுன் இன மக்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இந்த வடக்கு போர்னியோ மொழிகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த வடக்கு போர்னியோ மொழிகள் துணைக்குழுவை உருவாக்க, 2010-ஆம் ஆண்டில் முன்மொழிவு செய்தவர் ராபர்ட் பிளஸ்ட் (Robert Blus) எனும் அமெரிக்க மொழியியலாளர் ஆகும்.[6] மேலும் காண்கமேற்கோள்கள்
நூல்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia