கிந்தாக் மொழி
கிந்தாக் மொழி (ஆங்கிலம்: Kintaq Language; மலாய்: Bahasa Kintaq) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் அசிலியான் மொழிகள்; வடக்கு அசிலியான் மொழிகள் துணைக் குடும்பங்களைச் சார்ந்த ஒரு மொழியாகும். மலேசியா, தாய்லாந்து நாடுகளில் இந்த மொழி பேசப்படுகிறது. அழிந்து போகாத சில அசிலியான் மொழிகள் இதுவும் ஒன்றாகும். இருப்பினும், இந்த மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.[3] கிந்தாக் மக்கள்தீபகற்ப மலேசியாவில் உள்ள பத்தொன்பது மலேசியப் பழங்குடியினர் குழுக்களில் கிந்தாக் மக்கள் குழுவும் ஒன்றாகும். அவை செமாங் குழு அல்லது நெகிரிட்டோ மக்கள் குழு என்றும் அழைக்கப்படுகின்றன. கிந்தாக் மொழி, கென்சியூ மொழிக்கு மிகவும் நெருக்கமானது. பேராக்கின் உலு பேராக் மாவட்டத்தில் உள்ள கிரிக் காட்டுப் பகுதிகளில் பெரும்பாலான கிந்தாக் மக்கள் குடியேறியுள்ளனர். சிலர் கிளாந்தான் மாநிலத்திலும் வசிக்கின்றனர்.[4] மேலும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia