வட்டானம்

வட்டானம், தமிழ்நாடு மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை வட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள வட்டானம் கிராமம், கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டிக்கும் - சுந்தரபாண்டியன்பட்டினத்திற்கும் இடையே அமைந்துள்ளது.

வங்காள விரிகுடா கடற்கரை கிராமமான வட்டானத்தின் அஞ்சல் சுட்டு எண் 623 409 ஆகும். இதனருகில் உள்ள அஞ்சலகம் தொண்டியில் உள்ளது. தொலைபேசி குறியீடு எண் 04561 ஆகும். இக்கிராமத்தினரின் முக்கியத் தொழில் கடல் மீன் பிடித்தல் ஆகும்.

வட்டானம், இதன் வருவாய் வட்டத் தலைமையிடமான திருவாடானையிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும்; தொண்டிக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவிலும், சுந்தரபாண்டியன்பட்டினத்திற்கு தெற்கே 4 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைமையிட நகரமான இராமநாதபுரத்திற்கு வடக்கே 67 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[1]

வட்டானம் திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

அருகில் உள்ள கிராமங்கள் பாசிப்பட்டினம், தேளூர் (7 கி.மீ.), சுந்தரபாண்டியன்பட்டினம் (8 கி.மீ.), தொண்டி, திருவெற்றியூர், நம்புதாளை ஆகும். வட்டானத்திற்கு அருகமைந்த நகரங்கள் தேவக்கோட்டை காரைக்குடி, பேராவூரணி மற்றும் பரமக்குடி ஆகும்.

வட்டானத்திற்கு வடக்கில் ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம், தெற்கில் இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேற்கில் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. வட்டாணம் ஊராட்சியில் முக்கிய கிராமமான தாமோதரன் பட்டிணம் என்னும் கிராமம் கடல் தொழிலில் சிறந்து விளங்குகிறது. இக்கிராமத்தில் புகழ் பெற்ற தெய்வமாக ஸ்ரீ ஈச்சங்காட்டு காளி அம்மன் கோவில் அமைந்துள்ளது.[சான்று தேவை]

மக்கள்தொகை பரம்பல்

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வட்டானம் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 2,456 ஆகும். இக்கிராமத்தில் 556 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தின் மக்கள்தொகையில் ஒடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 403 (16.41%) ஆகவும்; பழங்குடிகளின் எண்ணிக்கை 145 ( 5.90%) ஆகவும் உள்ளது. எழுத்தறிவு 82.04% ஆக உள்ளது. [2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya