நம்புதாளை ஊராட்சி
கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்த நம்புதாளை கிராமம், வங்காள விரிகுடா கடற்கரையைக் கொண்டது[7] இதன் அஞ்சல் சுட்டு எண் 623403 ஆகும். 2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 8064 ஆகும். இவ்வூரின் மக்கள்தொகையில் 655 (8.1%) ஒடுக்கப்பட்டோர் ஆவார். தொண்டியிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், வட்டத் தலைமையிடமான திருவாடானையிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் நம்புதாளை சிற்றூர் உள்ளது. நம்புதாளை கிராமப் பஞ்சாயத்து, திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இக்கிராமத்தின் வேளாண் நிலங்களுக்கு, ஊரணிகள் நீர் பாசானத்திற்கு உதவுகிறது. மீன் பிடி தொழிலும் நடைபெறுகிறது. அருகமைந்த கிராமங்கள் திருவெற்றியூர் மற்றும் தொண்டி ஆகும். இச்சிற்றூரில் அரசு துவக்கப் பள்ளியும், நடுநிலைப் பள்ளியும் உள்ளது. மேலும் மூன்று மருத்துவர்கள் கொண்ட துணை ஆரம்பச் சுகாதார மையம் செயல்படுகிறது. இக்கிராமத்தில் ஒரு துணை அஞ்சலகம் செயல்படுகிறது. யுனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கிளையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியும், பொது நூலகமும், பணம் எடுக்கும் இயந்திரமும் (ATM) உள்ளது. வழிபாட்டுத் தலங்கள்
அடிப்படை வசதிகள்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
சிற்றூர்கள்இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[8]:
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia