வனேடியம் கார்பைடு
வனேடியம் கார்பைடு (Vanadium carbide ) என்பது VC என்ற மூலக்கூற்று வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். இது மிகவும் அதிகமான வெப்பம் தாங்கும் பீங்கான் பொருளாகும். இச்சேர்மத்தின் கடினத்தன்மை அளவு மோவின் அளவுகோல் மதிப்பு 9 – 9.5 ஆகும். அநேகமாக அறியப்பட்ட கடினமான உலோகப் பொருட்களில் மிகவும் கடினமான பொருள் இதுவாகத்தான் இருக்கும்[2]. வனேடியம் இந்தக் காரணத்திற்காகவேதான் உலோகம் மற்றும் உலோக கலவைகளில் பொதுவாக இடம் பெறுகிறது[3] அமைப்பும் பண்புகளும்வனேடியம் ஓராக்சைடுடன் ஒத்தவடிவமைப்பு கொண்டிருப்பதால் இது பாறை உப்பு வடிவமைப்பில் படிகமாகிறது. ஏனெனில் வனேடியம் கார்பைடும் வனேடியம் ஓராக்சைடும் ஒன்றாகக் கலக்கும் தன்மையுடையனவாகும். வனேடியம் கார்பைடு மாதிரிகளில் வனேடியம் ஓராக்சைடு மாசாகக் கலந்திருக்கிறது. வனேடியம் ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து 1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்குவதன் மூலம் இதைத் தயாரிக்கலாம். வானொலி அலைவரிசை மேக்னெட்ரான் தெறித்துப் பூசும் நிலையில் வனேடியம் கார்பைடை (111) திசையமைப்பில் உருவாக்க முடியும். வெப்ப இயக்கவியல் அடிப்படையில் வனேடியம் கார்பைடு நிலைப்புத் தன்மை கொண்டது ஆகும். உயர் வெப்பநிலைகளில் இது V2C ஆக மாற்றப்படுகிறது. வனேடியம் கார்பைடை தங்குதன் கார்பைடுடன் கூட்டுப்பொருளாக சேர்த்து கார்பைடு படிகங்களின் பீங்கான் தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இயற்பியல் பண்புகள்வனேடியம் கார்பைடின் மீள்மைக் குணகம் மதிப்பு தோராயமாக 380 ஜிகா பாஸ்கல் ஆகும்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia