இருவனேடியம் ஐயொட்சைட்டு
இருவனேடியம் ஐயொட்சைட்டு (Divanadium pentaoxide) அல்லது வனேடியா (Vanadia) என்பது V2O5 என்ற வேதியியல் வாய்பாட்டைக் கொண்ட கனிமச் சேர்வையாகும்.[1] இது மண்ணிறம் அல்லது மஞ்சள் நிறமான திண்மமாகும்.[2] நீர்க் கரைசலிலிருந்து தூயதாக வீழ்படிவாக்கப்படும்போது இது கடுஞ்செம்மஞ்சள் நிறமுடையதாகக் காணப்படும்.[3] உயரொட்சியேற்ற நிலையிலுள்ளதன் காரணமாக இருவனேடியம் ஐயொட்சைட்டானது ஈரியல்புடையதாகக் காணப்படுவதோடு, ஒட்சியேற்றுங் கருவியாகவும் தொழிற்படுகின்றது.[2] ஊக்கியாகப் பயன்படுத்தப்படுவதாலும் வனேடியத்தின் மாழைக் கலவைகளின் ஆக்கத்தில் பயன்படுத்தப்படுவதாலும் கைத்தொழில் நோக்கில் வனேடியத்தின் முக்கியமான சேர்வையாக இது விளங்குகின்றது.[4] இச்சேர்வையின் கனிம வடிவமான செருபினைட்டானது மிகவும் அரிதாக நீராவித் துளைகளில் கிடைக்கின்றது.[5] நவசொயிட்டு என்ற பெயரில் அறியப்படும் கனிம மூவைதரேற்றான V2O5·3H2O ஆகவும் இருவனேடியம் ஐயொட்சைட்டானது காணப்படுகின்றது.[6] வேதியியல்புகள்வெப்பமேற்றும்போது இருவனேடியம் ஐயொட்சைட்டானது ஒட்சிசனை இழந்து முறையே, V2O4, V2O3, VO ஆகிய ஒட்சைட்டுகளையும் வனேடியத்தையும் தோற்றுவிக்கும்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia