வனேடியம் நான்மபுளோரைடு
வனேடியம் நான்மபுளோரைடு (Vanadium tetrafluoride), அல்லது வனேடியம்(IV) புளோரைடு (Vanadium(IV) fluoride), என்பது VF4 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம சேர்மமாகும். வனேடியமும் புளோரினும் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது. மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும் இவ்வுப்பு இணைக்காந்தத் தன்மையும் ஈரமுறிஞ்சும்[1] பண்பையும் கொண்டுள்ளது. வனேடியம் நான்மபுளோரைடு பலபடி அமைப்பை ஏற்றுள்ளதால் இதனையொத்த வனேடியம் நான்மகுளோரைடு போல துரிதமாக ஆவியாவதில்லை. இது உருகுவதற்கு முன்னரே சிதைவடைகிறது. தயாரிப்பும் வேதி வினைகளும்முதன்முதலில் வனேடியம் நான்மகுளோரைடுடன் ஐதரசன் புளோரைடை சேர்ப்பதன் மூலமாக வனேடியம் நான்மபுளோரைடு தயாரிக்கப்பட்டது[3]
325 பாகை செல்சியசு வெப்பநிலையில் வனேடியம் நான்மபுளோரைடு விகிதச்சமமற்று வனேடியம் முப்புளோரைடு மற்றும் வனேடியம் ஐம்புளோரைடுகளாகச் சிதைவடைகிறது:[1]
அமைப்பு![]() VF4 சேர்மத்தின் கட்டமைப்பு SnF4 கட்டமைப்புடன் தொடர்புடையது. ஒவ்வொரு வனேடிய மையமும் எண்முகம் கொண்டு ஆறு புளோரைடு ஈந்தணைவிகளால் சூழப்பட்டுள்ளது, நான்கு புளோரைடு மையங்கள் அடுத்துள்ள வனேடியம் மையங்களுடன் பாலம் அமைக்கின்றன.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia