வன்னி (மரம்)
வன்னி (Prosopis cineraria அல்லது Prosopis spicigera) என்பது ஆப்கானித்தான், ஈரான், இந்தியா, ஓமான், பாக்கித்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், யெமன் உட்பட மேற்காசியாவிலும் தெற்காசியாவிலும் காணப்படும், அவரையினங்களைச் சேர்ந்த ஒரு பூக்கும் மரமாகும். இது பிற்காலத்தில் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, விரவிக் காணப்படுகிறது.[1] இது பல பெயர்களால் இடத்துக்கிடம் அழைக்கப்படுகிறது. அரபியில் கஃப் என்றும்,[2] இராச்சசுத்தான் மொழியில் சங்ரி என்றும், பஞ்சாபியில் ஜந்த்[1] என்றும், சிந்தியில் கண்டி என்றும், கன்னடத்தில் வ(b)ன்னி என்றும், சௌங்கிரா[1], ஜந்த்/ஜந்தி, கர்,[1] கெஜ்ரி/கெஜ்ரா,[1] சமி, ஷமி ஆகிய பெயர்களால் மராத்தியிலும் இந்தியிலும்[3] சும்ரி என்று குஜராத்தியிலும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் இராச்சசுத்தான் மாநிலத்தின் மாநில மரமும், பாக்கித்தானின் சிந்து மாகாணத்தின் மாகாண மரமும் ஆகும். இதன் 400 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை என நன்கறியப்பட்ட மிகப் பெரும் மரங்கள் பஹ்ரைன் நாட்டின் பாலைவனங்களில், நீர் அரிதாகக் கிடைத்த நிலையிலுங்கூட ஓங்கி வளர்ந்திருக்கின்றன. வன்னி மரம் பல்வேறு சிறப்புகளை உடைய மரம்.சோழ மன்னர்களின் குல மரம் என்னும் சிறப்பு உடையது என்பதனை தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தல விருட்சமாக மூலம் அறியலாம். [சான்று தேவை] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia