வாரிசு
வாரிசு (Varisu) என்பது 2023 இல் தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி பைடிபைலி எழுதி இயக்கிய இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் முக்கிய கதைப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2023 சனவரி 11 அன்று வெளியிடப்பட்டது. நடிகர்கள்
ராஜேந்திரனின் தந்தை பழனிசாமியை சித்தரிக்க ஜெமினி கணேசனின் உருவப்படம் பயன்படுத்தப்பட்டது. தயாரிப்பு2021 செப்டம்பர் 26 அன்று, தளபதி 66 என்ற தலைப்பில் விஜய்யின் 66வது படம் அறிவிக்கப்பட்டது. இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் மூலம் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்த முதல் தமிழ் படம். விஜய்யின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 2022 சூன் 21 அன்று வாரிசு என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டது.[6] இசைவிஜய்யுடன் தனது முதல் கூட்டணியில் தமன் எஸ் இசையமைத்துள்ளார்.[7] இப்படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன.[8]பாடலாசிரியர் விவேக் அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
திரைப்பட வெளியீடு2023 சனவரி 11 ஆம் தேதி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டனர்.[9] குறிப்புகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia