வால்கிரி (திரைப்படம்)
வால்கெய்ரி (Valkyrie) என்பது பிறையன் சிங்கர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான ஓர் வரலாற்று பரபரப்பூட்டும் திரைப்படம்.[5] கிறிஸ்டோபர் மெக்குவாரி மற்றும் நாதன் அலெக்சாண்டர் ஆகியோரால் எழுதப்பட்ட இப்படத்தில் டாம் குரூஸ் நடித்திருந்தார். கதைக் கருஇரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஜெர்மனியில் நடப்பதுபோல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம், 1944 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி ஜெர்மன் இராணுவ அதிகாரிகள் அடால்ஃப் இட்லரை படுகொலை செய்யவும், இராணுவப் புரட்சி மூலம் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற ஆபரேஷன் வால்கெய்ரி என்ற தேசிய அவசரகாலத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கு ஜெர்மனி ராணுவ அதிகாரிகள் தீட்டிய 20 ஜூலை சதித் திட்டத்தை இந்த திரைப்படம் விவரிக்கிறது. டாம் க்ரூஸ் சதித்திட்டத்தின் முக்கிய மனிதரான கர்னல் கிளாஸ் வான் ஸ்டாஃபென்பெர்க்[6] என்ற வேடத்தில் நடித்திருந்தார். கென்னத் பிரானாக், பில் நை, எடி இஸார்ட், டெரன்ஸ் ஸ்டாம்ப் மற்றும் டாம் வில்கின்சன் மற்றும் தோமஸ் கிரெட்ச்மன் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்திருந்தனர். இந்தப் படம் அமெரிக்காவின் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. டாம் குரூஸ் சைன்டாலஜி (Scientology) (இந்த வார்த்தைக்கு உண்மை/அறிவு பற்றிய ஆய்வு என்று பொருள்) நம்பிக்கை உடையவர் என்பதால் அவர் இப்படத்தில் நடிப்பது ஜெர்மன் அரசியல்வாதிகள் மற்றும் வான் ஸ்டாஃபன்பர்க் குடும்பத்தாரிடையே சர்ச்சையை உண்டுபண்ணியது. இதன் காரணமாக, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் ஜெர்மனியில் படப்பிடிப்பு நடத்த இடங்களைத் தேர்வு செய்வதில் சிரமப்பட்டனர். ஆனால் பின்னர் அவர்களுக்கு பெர்லினின் வரலாற்று சிறப்புமிக்க பெண்ட்லர்பிளாக் போன்ற இடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. சதி குறித்து உலகளாவிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக ஜெர்மன் செய்தித்தாள்களும் திரைப்படத் துறையினரும் இந்த திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். வெளியீடுஇந்த படத்தின் வெளியீட்டு தேதி பலமுறை மாற்றம் கண்டது, ஜூன் 27, 2008 என்பதில் ஆரம்பித்து பிப்ரவரி 14, 2009 வரை சென்றது. இந்த தேதி மாற்றங்களும் ஆரம்பகால சந்தைப்படுத்தல் பிரச்சாரத்திற்குக் கிடைத்த மோசமான வரவேற்பும் படத்தின் நம்பகத்தன்மை குறித்து விமர்சனங்களை எழுப்பியது. இறுதியாக நேர்மறையான சோதனைத் திரையிடலுக்குப் பிறகு, வட அமெரிக்காவில் வால்கிரியின் வெளியீடு டிசம்பர் 25, 2008 க்கு மாற்றப்பட்டது, மேலும் ஜனவரி 22, 2009 அன்று ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. யுனைடெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் குரூஸ் மீதான தனது கவனத்தைக் குறைத்து சிங்கரின் நற்சான்றிதழ்களை முன்னிலைப்படுத்த அதன் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை புதுப்பித்தது. இந்தத் திரைப்படம் பொதுவாக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், உலகளவில் $201 மில்லியன் வசூலித்தது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வால்கிரி (திரைப்படம்) பரணிடப்பட்டது 2008-12-01 at the வந்தவழி இயந்திரம் |
Portal di Ensiklopedia Dunia