விகாசு தாக்ரே
விகாசு பாண்டுரங் தாக்கரே (Vikas Thakre) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 14-ஆவது மகாராட்டிரா சட்டமன்ற தேர்தலில் நாக்பூர் மேற்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதன் முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். தாக்கரே இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர்.[1][2][3] இவர் நாக்பூர் மாவட்ட காங்கிரசு கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 2020 டிசம்பர் முதல் நாக்பூர் மேம்பாட்டு அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார். தாக்கரே 2024 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியினை எதிர்த்துப் போட்டியிட்டு 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பின்னர் நவம்பர் 2024-ல் நடைபெற்ற மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் நாக்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia