நாக்பூர் மேற்கு (எண் 56) சட்டமன்றத் தொகுதியானது, நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 12 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது நாக்பூரில் உள்ள பணக்கார தொகுதிகளில் ஒன்றாகும். குடிமைப் பகுதி, பைராம்ஜி நகரம், ஜாபர் நகர் போன்ற நாக்பூரின் பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் வசிக்கும் பகுதிகள் இந்த தொகுதியில் அடங்கும். 2019ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் விகாசு தாக்கரே பாஜக சுதாகர் தேஷ்முக்கை எதிர்த்து வெற்றி பெறும் வரை இந்த தொகுதியில் பாஜகவின் வலுவான பிடி இருந்தது.