விக்கிப்பீடியா:உதவித்தொகைதிட்ட நோக்கம்தொடர்ந்து பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியர்கள் எவரேனும் உதவித் தொகை பெறும் வாய்ப்பு இருந்தால் கூடுதலாக பங்களிக்க இயலும் என்று நினைக்கிறீர்களா? எடுத்துக்காட்டுக்கு, சொந்தமாக ஒரு கணினி, திறன் குறைந்த பழைய கணினியை மாற்றி விட்டுப் புதிய கணினி, கட்டுரைகளுக்கான தகவலைச் சேர்ப்பது தொடர்பான செலவுகள் ( நூல் வாங்குதல் / நூலக அணுக்கம் / ஒளிப்பட கருவி வாங்குதல்), மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் மின்கலன் (inverter / UPS) வாங்குதல், மாணவராக இருந்தால் மாதாந்த இணைய அணுக்கச் செலவுகள், விக்கிப்பீடியா தொடர்பான பரப்புரை / மாநாட்டுக்குச் சென்று வரும் செலவுகள் ஆகியன. ஆம் எனில், உங்கள் தேவையைத் தெரிவிக்க முடியுமா? உண்மையிலேயே சிறப்பாக பங்களிக்கக்கூடியவருக்கு வளங்களுக்கான அணுக்கமின்மை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கம். இது ஒருவரின் பங்களிப்புக்கான பரிசோ சலுகையோ அன்று என்பதால் உண்மையிலேயே தேவை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிப்பது நன்று. பின்வருமாறு உங்கள் வேண்டுகோளை இடுங்கள். ==பயனர் பெயர்== இங்கு பயனர் தன் தேவையை விளக்கி வேண்டுகோள் இட வேண்டும். உத்தேச செலவு, தேவைப்படும் காலம் ஆகியவற்றைக் குறிப்பிடுவது உதவும். ===ஆதரவு=== இங்கு இந்த வேண்டுகோளை ஏற்கும் மற்ற பங்களிப்பாளர்கள் ஆதரவும் கருத்தும் தெரிவிக்கலாம். பயனர் இது வரை அளித்துள்ள பங்களிப்பு, தேவையின் நியாயம், அதற்கு உரிய சரியான செலவு என்ற அடிப்படையில் ஆதரவு இருக்க வேண்டும். ===மறுப்பு=== இங்கு இந்த வேண்டுகோளை மறுக்கும் மற்ற பங்களிப்பாளர்கள் மறுப்பையும் கருத்தையும் தெரிவிக்கலாம். ===கருத்து=== இங்கு பொதுவான கருத்துகளை இடலாம். மேற்கண்ட உரையாடல், ஆதரவு / மறுப்பு வழங்குவதற்கு இரண்டு வார காலம் தரப்படும். அதன் பிறகு, உரையாடலின் முடிவுக்கு ஏற்ப பயனருக்கான உதவித் தொகையைப் பெற்றுத் தர ஏற்பாடுகள் செய்ய முனைவோம். நடப்பு வேண்டுகோள்கள் User:Titodutta |
எண் | பயனர்/ஐ.பி. | புது | தொகு | வழி | படி | வார் | பகு | இதர | மொத்தம் | பைட் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 13-07-2014 முடிந்த வாரம் | 53 | 66 | 16 | 0 | 6 | 4 | 75 | 220 | 306167 |
2 | 20-07-2014 முடிந்த வாரம் | 141 | 134 | 52 | 0 | 43 | 23 | 126 | 519 | 512705 |
3 | 27-07-2014 முடிந்த வாரம் | 68 | 63 | 7 | 2 | 21 | 4 | 68 | 233 | 305684 |
4 | 03-08-2014 முடிந்த வாரம் | 86 | 124 | 18 | 0 | 5 | 3 | 79 | 315 | 251138 |
5 | 10-08-2014 முடிந்த வாரம் | 12 | 89 | 3 | 3 | 2 | 2 | 62 | 173 | 52934 |
6 | 17-08-2014 முடிந்த வாரம் | 36 | 111 | 11 | 2 | 6 | 8 | 74 | 248 | 111604 |
7 | 24-08-2014 முடிந்த வாரம் | 31 | 60 | 11 | 1 | 3 | 11 | 37 | 154 | 127069 |
8 | 31-08-2014 முடிந்த வாரம் | 14 | 98 | 11 | 5 | 2 | 7 | 23 | 160 | 98324 |
9 | 07-09-2014 முடிந்த வாரம் | 34 | 69 | 10 | 0 | 2 | 5 | 27 | 147 | 147474 |
10 | 14-09-2014 முடிந்த வாரம் | 33 | 57 | 8 | 0 | 2 | 12 | 19 | 131 | 80027 |
11 | 21-09-2014 முடிந்த வாரம் | 12 | 49 | 12 | 0 | 0 | 9 | 4 | 86 | 47414 |
12 | 28-09-2014 முடிந்த வாரம் | 15 | 21 | 5 | 0 | 1 | 2 | 3 | 47 | 35096 |
13 | 05-10-2014 முடிந்த வாரம் | 13 | 29 | 9 | 0 | 5 | 3 | 9 | 68 | 43173 |
Impact (English Version)
Week | Period | New | Edits | Redirects | Images | Tenplates | Cats | Other | Total | Bytes |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | Week ending 13-07-2014 | 53 | 66 | 16 | 0 | 6 | 4 | 75 | 220 | 306167 |
2 | Week ending 20-07-2014 | 141 | 134 | 52 | 0 | 43 | 23 | 126 | 519 | 512705 |
3 | Week ending 27-07-2014 | 68 | 63 | 7 | 2 | 21 | 4 | 68 | 233 | 305684 |
4 | Week ending 03-08-2014 | 86 | 124 | 18 | 0 | 5 | 3 | 79 | 315 | 251138 |
5 | Week ending 10-08-2014 | 12 | 89 | 3 | 3 | 2 | 2 | 62 | 173 | 52934 |
6 | Week ending 17-08-2014 | 36 | 111 | 11 | 2 | 6 | 8 | 74 | 248 | 111604 |
7 | Week ending 24-08-2014 | 31 | 60 | 11 | 1 | 3 | 11 | 37 | 154 | 127069 |
8 | Week ending 31-08-2014 | 14 | 98 | 11 | 5 | 2 | 7 | 23 | 160 | 98324 |
9 | Week ending 07-09-2014 | 34 | 69 | 10 | 0 | 2 | 5 | 27 | 147 | 147474 |
10 | Week ending 14-09-2014 | 33 | 57 | 8 | 0 | 2 | 12 | 19 | 131 | 80027 |
11 | Week ending 21-09-2014 | 12 | 49 | 12 | 0 | 0 | 9 | 4 | 86 | 47414 |
12 | Week ending 28-09-2014 | 15 | 21 | 5 | 0 | 1 | 2 | 3 | 47 | 35096 |
13 | Week ending 05-10-2014 | 13 | 29 | 9 | 0 | 5 | 3 | 9 | 68 | 43173 |
நீட்டிப்பு
இந்த திட்டைத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உதவினால், தடையற்ற பங்களிப்பை வழங்க ஏதுவாக இருக்கும். போதிய நிதி வசதி இல்லாததால் உதவி கோர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். தயைகூர்ந்து உதவுக. நன்றி! - தமிழ்க்குரிசில் 12 அக்டோபர் 2014
குறிப்பு: அடுத்த மூன்று மாத இணையச் செலவுக்கான தொகை: 3*399 = 1,197 இந்திய உரூபாய்--இரவி (பேச்சு) 07:21, 15 அக்டோபர் 2014 (UTC)
ஆதரவு
- எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவித் தொகையை அளித்திருந்தாலும், தமிழ்க்குரிசிலின் கடந்த மூன்று மாதப் பங்களிப்புகள் மிகச் சிறப்பாக உள்ளன. (நடுவில் பணிக்குச் சென்று விட்டார் என்பதால் பங்களிப்புகள் சற்று குறைந்தன். இல்லாவிட்டால், இன்னும் பன்மடங்கு பங்களிப்புகள் கிட்டியிருக்கும்!) இதனை முன்மாதிரியாக வைத்து இந்தியா முழுமைக்கும் இது போன்ற திட்டத்தை முன்னெடுக்க எண்ணியுள்ளேன். முழு ஆதரவு. --இரவி (பேச்சு) 07:21, 15 அக்டோபர் 2014 (UTC)
- மிகவும் பயனுள்ள விதத்தில் கிடைத்த உதவித்தொகை கொண்டு பங்காற்றிய தமிழ்க்குரிசிலுக்கு பாராட்டுக்கள் ! அவரது நடத்தை மூலம் மற்றவர்களுக்கும் விரிவுபடுத்த ஊக்கம் அளித்துள்ளார். வாழ்க! வளர்க அவர்தம் பணி ! முழு ஆதரவு.--மணியன் (பேச்சு) 07:53, 15 அக்டோபர் 2014 (UTC)
Info-farmer (தகவலுழவன்)
அறிமுகம்: நான் தகவலுழவன் ! நான் ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாக (2008 முதல்) விக்கிமீடியத்திட்டங்களில் பங்களிப்பு செய்து வருகிறேன்.எனது அனைத்து விக்கிப்பங்களிப்புகளையும், இவ்விணைப்பில் காணலாம். மேலும், நூலகம், கணியம் போன்ற பிற திட்டங்களிலும் நான் பங்களிப்பதுண்டு. இந்திய அளவில் நடைபெற்ற 3பயிலரங்குகளிலும், கருத்தரங்களிலும், தமிழக அளவில் நடைபெற்ற இணையத்தமிழ் கருத்தரங்குகள், நான்கிலும் கலந்து கொண்டுள்ளேன். இத்தகைய ஈடுபாடு என்னுள் ஏற்பட்டமைக்குக் காரணம், விக்கிமீடியா வழி எனக்குக் கிடைத்த நண்பர்களே ஆவர். அந்நண்பர்களிடம் என்னை அடையாளப்படுத்தியது இரவியே. சிலருக்கு அவர்கள் உதவினாலும், நான் ஒருவனே, தொடர்ந்து அந்நண்பர்களிடம் பல்வேறு நிரல் சார்ந்த உதவிகளையும் பெற்று வளர்ந்து வருகிறேன். அதோடு அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு கணினியை, நான் எனது இல்லத்தில் இருந்து செயற்பட வாங்கி அன்பளிப்பாக அளித்தனர். மேலும், சில நண்பர்கள் எனது குடும்ப சூழ்நிலையிலும், பொருளாதார ஆதரவு அளித்துள்ளனர். பல்வேறு மனஅழுத்தத்தில் நான் இருப்பினும், அவர்களின் அன்பு, அக்கரை என்னை இங்கேயே வட்டமடிக்க செய்தது. இருப்பினும், அக்கணினியின் இயக்கம், தற்போது சரியில்லை. ஏனெனில், என் வாழிடத்தில், அடிக்கடி ஏற்படும் மின்அழுத்த மாற்றம் காரணமாகவும், எனது பணியிட வெப்பம் காரணமாகவும், அது முன்பு போல செயற்படுவதில்லை.
கோரிக்கை: எனவே, தற்போது தொடர்ந்து செயற்படவும், இந்திய அளவில் விக்சனரி திட்டங்களை ஒருங்கிணைக்கும் பணியிலும், பிற நுட்பவியல் கலந்தாய்வில் பங்கு கொள்ள இருப்பதாலும், பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலையிலும் உள்ளேன். விக்கிமட்டும் அல்லாது திறநிலை/கட்டற்ற மென்பொருள் திட்டங்களிலும், தமிழ் மொழி சார்ந்து மொழியியல் கணியநுட்பங்களையும் ஈடுபாடு கொண்டுள்ளதால், பல நுட்பவியலாளர்களை சந்திக்கும் போது, திரைநிகழ்பட பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன். அப்பொழுது தான் அந்த அனுபவங்களை, நம் தமிழ் விக்கிமீடியா சமூதாயத்திற்கு கொண்டு வர இயலும். ஏனெனில், புதிய அனுபவங்களை திரும்ப திரும்ப பார்க்கும் போதே, பயிலும் போதே அதனை மேம்படுத்திக் கொள்ள முடியும். பிறக்கும் எளிமையாக்கி என்றும் தர, திரைநிகழ்பட பாடங்களை உருவாக்க இயலும். இதற்கென விக்கி விளக்கு என்ற திட்டத்தை செயற்படுத்த உள்ளேன். அதோடு விக்சனரிக்கென்று பல வசதிகள் தேவைப்படுகின்றன. அவற்றையும் உருவாக்க வேண்டும். எனவே, எனக்கு ஒரு மடிக்கணினி வேண்டும். அது இந்தியவிக்கிமீடியாவின் இம்முறை வழியேப் பெற உங்கள் ஆதரவு வேண்டும். எனவே, உங்கள் ஆதரவினையும், கருத்தினையும் தருக. வணக்கம்.--த♥உழவன் (உரை) 17:23, 4 சூலை 2015 (UTC)
ஆதரவு (Support)
- தமிழ் விட்சனரித் திட்டத்தில் முனைப்புடன் செயற்பட்டு வருபவர். தமிழ்ப் பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுதிட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகள். --மதனாகரன் (பேச்சு) 18:22, 4 சூலை 2015 (UTC)
- --நந்தகுமார் (பேச்சு) 18:26, 4 சூலை 2015 (UTC)
- வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 22:45, 4 சூலை 2015 (UTC)
- வாழ்த்துகள்.--கலை (பேச்சு) 22:52, 4 சூலை 2015 (UTC)
- ஆதரவு. --AntanO 00:49, 5 சூலை 2015 (UTC)
- ஆதரவு - விக்சனரி தேங்கிவிடாமல் இருக்க தகவலுழவனுக்கு ஆதரவு. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 01:57, 5 சூலை 2015 (UTC)
- ஆதரவு - கி.மூர்த்தி (பேச்சு)
- வாழ்த்துகள் & ஆதரவு --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:38, 5 சூலை 2015 (UTC)
- --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:40, 5 சூலை 2015 (UTC)
- --சண்முகம்ப7 (பேச்சு) 04:02, 5 சூலை 2015 (UTC)
- --சோடாபாட்டில்உரையாடுக 04:25, 5 சூலை 2015 (UTC)
- --Surya Prakash.S.A. (பேச்சு) 04:49, 5 சூலை 2015 (UTC)
- வாழ்த்துகளும் ஆதரவும் --மணியன் (பேச்சு) 12:16, 5 சூலை 2015 (UTC)
- --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:37, 5 சூலை 2015 (UTC)
- -- ஆதரவு - மயூரநாதன் (பேச்சு) 13:15, 5 சூலை 2015 (UTC)
- ஆதரவு. சுந்தர் \பேச்சு 16:23, 5 சூலை 2015 (UTC)
- வாழ்த்துகளும் ஆதரவும்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:57, 5 சூலை 2015 (UTC)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:57, 5 சூலை 2015 (UTC)
- ஆதரவு.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:38, 6 சூலை 2015 (UTC)
- வாழ்த்துகள்! --Chandravathanaa (பேச்சு) 04:52, 6 சூலை 2015 (UTC)
- ஆதரவு.--Commons sibi (பேச்சு) 08:37, 6 சூலை 2015 (UTC)
- ஆதரவு. appswiki தொகுப்பானைப் பலரிடம் கொண்டுசென்ற இவரின் உழைப்பு அபாரமானது --நீச்சல்காரன் (பேச்சு) 10:56, 6 சூலை 2015 (UTC)
- நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். மின்னூலாக்கத்திலும் பங்களித்துள்ளார். அவ்வகையில் பலவிதமான தமிழ் சார் செயற்பாடுகளில் ஈடுபட இவருக்கான வசதிகள் வழங்கப்படுவது பொருத்தமானதே. கோபி (பேச்சு) 11:05, 6 சூலை 2015 (UTC)
- ஆதரவு --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 12:08, 6 சூலை 2015 (UTC)
- --Natkeeran (பேச்சு) 13:15, 6 சூலை 2015 (UTC)
- ஆதரவு! தமிழ் விக்சனரித் திட்டங்களில் முனைப்போடு பங்காற்றியமைக்கும், திட்ட முன்னெடுப்புகளை வைத்து செயல்படுத்தியமைக்கும், விக்கி கூட்டங்களில் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்தமைக்கும் நன்றி. தேவையான வசதிகளை உங்களுக்கு வழங்குவதன் மூலம் உங்கள் பங்களிப்பை செவ்வனே செய்ய முடியும் என்பதை உறுதியாக நம்புகிறேன். உங்கள் கோரிக்கையை வழிமொழிகிறேன் :P வாழ்த்துக்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:24, 6 சூலை 2015 (UTC)
- ஆதரவு. இது இவரது விக்கிப் பணிகளுக்கு பெரும் ஊக்கமாகவும் தொடர் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும் இருக்கும். --Tshrinivasan (பேச்சு) 21:55, 6 சூலை 2015 (UTC)
- ஆதரவு.--Booradleyp1 (பேச்சு) 13:36, 7 சூலை 2015 (UTC)
- ஆதரவு. விக்கிபீடியாவில் ஏற்படும் ஐயங்களைத் தீர்த்துவைப்பவர்களில் இவரும் ஒருவர். விக்கியில் நான் தொடர்ந்து எழுத ஊக்கமளிப்பவர். எதிர்மறைக் கருத்துக்கள் எதுவுமின்றி ஊக்கம் தருபவர். உரிய வசதிகள் வழங்கப்படுவதன்மூலம் இவர் மென்மேலும் பணியாற்ற வாய்ப்புண்டு. இவரது முயற்சிக்கு ஆதரவும், வாழ்த்தும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:06, 8 சூலை 2015 (UTC)
- மிகச்சிறந்த ஊக்கமாகவிருக்கும். பல்லாண்டுகளாக இடைவிடாது உழைத்து வருபவர். வலுவாக ஆதரிக்கின்றேன். --செல்வா (பேச்சு) 03:16, 8 சூலை 2015 (UTC)
- கோடி ஆதரவுகள்!!. தமிழ் விக்சனரியின் மாபெரும் தூண். இவரது கடுமையான அயராத உழைப்பை நன்கறிவேன்.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 05:24, 8 சூலை 2015 (UTC)
- ஆதரவு --Sengai Podhuvan (பேச்சு) 10:13, 8 சூலை 2015 (UTC)
- ஆதரவுபயனர்:செம்மல்50--Semmal50 (பேச்சு) 15:17, 8 சூலை 2015 (UTC)
- ஆதரவு - இது இவரைப் போன்ற முனைப்பான தன்னார்வலர்களுக்கு சிறந்த ஊக்கமாகவிருக்கும். --Mugunth (பேச்சு) 01:14, 9 சூலை 2015 (UTC)
- ஆதரவு --சிவகோசரன் (பேச்சு) 10:13, 10 சூலை 2015 (UTC)
- ஆதரவு - பிற மொழி விக்சனரியினருக்கும் முன்னோடிாக இவர் செயல்பட்டதை நன்கறிவேன் --ஹிபாயத்துல்லா (பேச்சு) 11:08, 10 சூலை 2015 (UTC)
- ஆதரவு -- பரிதிமதி (பேச்சு) ) 08:25, 17 சூலை 2015 (UTC)
- ஆதரவு -- இவர் மட்டுமல்லாமல் இன்னும் பல பேர்களை விக்கியில் ஊக்குவிப்பதால் எனது ஆதரவு பாலாஜி (பேச்சு) 07:34, 12 சூலை 2015 (UTC)
- ஆதரவு -- பயனர்:Thamizhpparithi Maari
- --Joshua-timothy-J (பேச்சு) 13:02, 15 சூலை 2015 (UTC)
- --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 07:06, 18 சூலை 2015 (UTC)
- வாழ்த்துகளும் ஆதரவும் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 14:15, 20 சூலை 2015 (UTC)
- வாழ்த்துகளும் ஆதரவும். தமிழ் விக்சனரியில் இவரைவிட முனைப்பாகப் பணியாற்றியவர் இல்லை.--−முன்நிற்கும் கருத்து Pazha.kandasamy (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- --- வாழ்த்துகள் & ஆதரவு --- பயனர்:TRYPPN
- --Titodutta (பேச்சு) 16:48, 25 ஆகத்து 2015 (UTC)
மறுப்பு (Oppose)
கருத்து (Comments)
- த. உழவன், அனைவரின் ஒருமித்த ஆதரவைக் காண மகிழ்ச்சி. விக்கிச்சமூகத்தின் கருத்தறிய இந்த வாக்குகளே போதுமானது. அடுத்து விக்கிமீடியா இந்தியா பக்கத்தில் முறையான விண்ணப்பம் இட்டுத் தொடர்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 06:52, 8 சூலை 2015 (UTC)
- //15நாட்கள் இவ்வாகிடல் நடைபெற வேண்டும் //என்ற பொது விதிக்கேற்ப காத்திருக்க விரும்புகிறேன். பின்னாளில், நம் தமிழ் விக்கமீடியா நடைமுறை குறித்து, பிறர் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதால் இது அவசியமன்றோ?. வணக்கம்.--த♥உழவன் (உரை) 01:45, 9 சூலை 2015 (UTC)
- @Ravidreams and Info-farmer: 15 நாள்கள் ஆகிவிட்டன. --மதனாகரன் (பேச்சு) 18:16, 22 சூலை 2015 (UTC)
- நினைவூட்டலுக்கு நன்றி. உரிய கணினியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக த. உழவடனுடன் உரையாடி வருகிறேன். விரைவில் இவ்விண்ணப்பத்தை நிறைவேற்றிவிட்டு இங்கு அறியத்தருகிறோம்.--இரவி (பேச்சு) 18:27, 22 சூலை 2015 (UTC)
- @Ravidreams and Info-farmer: 15 நாள்கள் ஆகிவிட்டன. --மதனாகரன் (பேச்சு) 18:16, 22 சூலை 2015 (UTC)
இற்றை (Update)
ஆகத்து 8, 2015 அன்று சென்னையில் வைத்து, தகவல் உழவன் கோரிய Lenovo IdeaPad Flex 14 மடிக்கணினியை (49,000 இந்திய உரூபாய் மதிப்பிலானது) தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக அவரிடம் ஒப்படைத்தோம். நடைமுறைக் காரணங்களை முன்னிட்டு இது தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தின் பயன்பாட்டுக்கு உரித்தான விக்கிமீடியா இந்தியாவின் உடைமையாக இருக்கும். தகவல் உழவன் விரும்பிய போதோ தொடர்ந்து செயற்பட முடியாத நிலையில் இருக்கும் போதோ விக்கிமீடியா இந்தியா கோரும்போதோ வேறு ஒரு பங்களிப்பாளரிடம் இக்கணினியை ஒப்படைக்கலாம். தொடர்ந்து சிறப்பாகச் செயற்பட தகவல் உழவனுக்கு வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 10:27, 11 ஆகத்து 2015 (UTC)
விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:42, 11 ஆகத்து 2015 (UTC)
விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 11:20, 11 ஆகத்து 2015 (UTC)
விருப்பம்--மணியன் (பேச்சு) 12:23, 11 ஆகத்து 2015 (UTC)
விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:53, 11 ஆகத்து 2015 (UTC)
- எனது விருப்பத்திற்கு ஏற்ப, அக்கணினியை, இந்திய விக்கிமீடியாவின் உடைமை என அனைவரிடமும் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. இரவி. வழமையான நமது விக்கிமீடியச் சமூக முன்னேற்ற முடிவுடன், எப்பொழுதும் அணியமாக இருப்பேன்.
- அதில் வின்டோசு(8) இயக்குதளம் தான் இயல்பிருப்பாக பயன்படுத்த வேண்டும் Lenovo வற்புறுத்துகிறது. மேலும், அதனின் மென்பொருளை தொடர்ந்து இற்றைப்படுத்த அதனை பதிவுசெய்ய வேண்டும் என்கிறது. அது குறித்து விவரம் தெரிந்தவர்கள், அத்தகைய விதிகளை ஏற்க உடன்பாடு இருப்பின், அதில் ஏற்படுத்திக் கொள்ளவும். அதற்காக நான் யாரை சந்திக்கவும் அணியமாக உள்ளேன். ஏனெனில், அக்கணினியைத் தவிர, அதனின் வேறு எந்த விற்பனை ஆவணத்தினையும் நான் பெறவில்லை. கேட்க மறந்து விட்டேன். எனவே, அதனையும் உரிய ஆவணம் செய்யக் கோருகிறேன்.
- மேலும், நான் இதுபோன்ற விற்பனை நிறுவனங்களின் விதிகளை ஏற்பதில்லை. ஏனெனில், நான் கட்டற்ற கணிய நிரல்களை மட்டுமே ஏற்பவன். எனது / எங்களது உடைமை மீது, பணம் வாங்குபவர் இடும் கட்டுப்பாட்டை, நான் வழமையாக ஏற்பது இல்லை. இது அடிமைத்தனம் என்பது எனது முடிவான எண்ணம். அதனால் சில மாற்றங்களை கொடுக்கப்பட்ட கணினியில் செய்ய உள்ளேன். அதற்கு எனக்கு 50 GBs போதும். (அதனின் வன்தட்டு 500 GBs. ஆகும்.) இதுகுறித்த விரிவான விளக்கத்தினை பிறர் கேட்டால் தருவேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 10:24, 12 ஆகத்து 2015 (UTC)
- இரண்டாம் நிலை இயங்குதளமாக மற்றைய இயங்குதளத்தை நிறுவியும் பயன்படுத்தலாம் (கூடுதலான இடம் உள்ளதால்). சில நிறுவனங்கள் மென்பொருள் நம்புறுதியை (Warranty) வழங்குவதுண்டு. அவ்வாறு இருந்தால், பதிவு செய்வது நன்று. கணினியில் மென்பொருட் சிக்கல் ஏற்படுமிடத்து, மீண்டும் விண்டோசை நிறுவுவதற்குத் தேவையான தொடரிலக்கம் பொதுவாகக் கணினியின் பின்புறம் இருக்கும். அதனையும் குறித்து வைத்திருப்பது உதவியாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 10:47, 12 ஆகத்து 2015 (UTC)
- இதுகுறித்து விரிவான் பக்கமொன்றில் தெரிவிப்பேன். எனினும், இதனைக் காணவும். இங்கு வேண்டாம். நுட்பமான அடிமையாக்கம். அதனை வேரறுத்து செயற்படுவேன். விரிவான விளக்கம் தேவையெனில் எனது எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும் 90 95 34 33 42 அல்லது மின்னஞ்சல்.--த♥உழவன் (உரை) 11:13, 12 ஆகத்து 2015 (UTC)
- மேற்கூறியது எனது பரிந்துரையே. மேற்கூறிய கணினி விக்கிமீடியா இந்தியாவின் உடைமையாக இருப்பதால் கணினியின் இயல்புநிலையான காப்புப் (Backup) படி விக்கிமீடியா இந்தியாவிடம் இருப்பது நன்று. கட்டற்ற மென்பொருள்களைப் பதிலீடு செய்வது உங்கள் தனிப்பட்ட உரிமை. மேற்கூறிய நுட்ப அடிமைத்தனம் தொடர்பான உங்கள் கொள்கையுடன் எனக்கு முரண்பாடு உண்டு. அது தொடர்பில் இங்குக் கருத்திற்கொள்ள வேண்டியதில்லை. வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுடையவர்கள் விக்கிப்பீடியாவில் ஒன்றிணைந்து பணியாற்றுவது போன்றதே இதுவும். --மதனாகரன் (பேச்சு) 11:29, 12 ஆகத்து 2015 (UTC)
- இரண்டாம் நிலை இயங்குதளமாக மற்றைய இயங்குதளத்தை நிறுவியும் பயன்படுத்தலாம் (கூடுதலான இடம் உள்ளதால்). சில நிறுவனங்கள் மென்பொருள் நம்புறுதியை (Warranty) வழங்குவதுண்டு. அவ்வாறு இருந்தால், பதிவு செய்வது நன்று. கணினியில் மென்பொருட் சிக்கல் ஏற்படுமிடத்து, மீண்டும் விண்டோசை நிறுவுவதற்குத் தேவையான தொடரிலக்கம் பொதுவாகக் கணினியின் பின்புறம் இருக்கும். அதனையும் குறித்து வைத்திருப்பது உதவியாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 10:47, 12 ஆகத்து 2015 (UTC)
- மதனாகரன், கணினி புதிதாக வாங்கியது என்பதால் அதில் காப்புப் படி எடுக்க என்று ஒன்றும் இல்லை. விண்டோசு நீக்கிய கணினியைக் கடையில் வாங்குவது சிரமமாக இருந்ததால் அதனுடன் சேர்த்தே வாங்கி விட்டோம். முறைப்படி வாங்கிய கணினி என்பதால் எப்போது வேண்டுமானாலும் தேவைப்பட்டால் விண்டோசு நிறுவிக் கொள்ளலாம். தகவல் உழவன் தாராளமாக கட்டற்ற மென்பொருளை மட்டும் கொண்டிருக்கும் கணினியை மட்டும் பயன்படுத்தலாம். அது விக்கிமீடியா கொள்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் ஒத்துப்போவதும் கூட. --இரவி (பேச்சு) 12:24, 12 ஆகத்து 2015 (UTC)
- கணினியின் தொடக்க ஏற்றியில் மாற்றம் செய்வதாக இருந்தாலும் என்றே (இலிபர்பூட்டின் இணைப்பைத் தந்தபடியால்), இதனைக் குறிப்பிட்டேன். இயங்குதளத்தை மாற்றுவது ஒரு சிக்கலே இல்லை. கணினியில் ஏதும் பாரிய சிக்கல் ஏற்படும்போது இயல்புநிலை BIOS தேவைப்படுமிடத்து, ஒரு முற்காப்பு நடவடிக்கையாகவே இதனைக் குறிப்பிட்டேன். --மதனாகரன் (பேச்சு) 13:01, 12 ஆகத்து 2015 (UTC)
- மதனாகரன் , ஓ, சரி :)--இரவி (பேச்சு) 13:18, 12 ஆகத்து 2015 (UTC)
Portal di Ensiklopedia Dunia