விக்கிப்பீடியா:கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு

"சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மையறிந்து" - திருக்குறள்


நீண்ட காலமாக பல பயனர்கள் கலைச்சொற்கள் தொடர்பான செயற்பாடுகள் விக்கிபீடியாவில் சிதறி நடைபெற்றுவருவதையும், மையப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த செயற்பாட்டுக்கான தேவையையும் உணர்த்தி வந்துள்ளார்கள். அக்குறையை நீக்கி தமிழ் விக்கிபீடியாவில் கலைச்சொல் செயற்பாடுகளை மையப்படுத்தி, ஒருங்கிணைத்து, நெறிப்படுத்த இந்த பக்கம் முனையும்.


இதன் முதல் கட்டச் செயல்பாடாக தமிழ் விக்கிபீடியாவில் சிதறி கிடக்கும் கலைச்சொற்கள் தொடர்பான பக்கங்கள் கீழே வரும் பட்டியலில் குவியப்படுத்தப்படுகின்றன. பின்னர் ஒவ்வொரு பக்கத்தின் நோக்கமும், தேவைகளும் ஆராயப்பட்டு தேவையற்ற பக்கங்கள் நீக்கப்படும்.


விக்சனரி[1]

இரண்டாவதாக தனிப்பட்ட கலைச்சொற்கள் தொடர்பான விவாதங்களை இனிமேல் விக்சனரியில் அல்லது அச்சொல் ஒரு கட்டுரையின் தலைப்பாக இருக்குமிடத்து கட்டுரையின் பேச்சு பக்கத்தில் வைத்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகின்றது. பிறபயனர்களின் கருத்துக்களும் இவ்விடயத்தில் வேண்டப்படுகின்றது.


தமிழ் விக்கிபீடியாவில் ஒரளவு வளர்ச்சி பெற்ற துறைகள் (எ.கா. இலத்திரனியல் ????) விக்கிபீடியாவில் தரப்படுத்தப்பட்ட கலைச்சொல் பட்டியலை உருவாக்கி (கட்டுரைகள் உருவாக்கப்படும் வேகத்துக்கு இணைய) பிற பயனர்களும் இயன்றவரை உபயோகிக்க பரிந்துரைக்கலாம். தரப்படுத்தப்பட்ட சொற்களை ஆட்சோபனை செய்யும் பயனர்கள் தகுந்த விவாதங்களை முன்வைக்குமிடத்து சொற்களை மாற்றி பரிந்துரை செய்யவும் வழிமுறைகள் வேண்டும்.


பல சமயங்களில் கட்டுரைகள் எழுதுவதற்கு கலைச்சொற்கள் தேவைப்படுகின்றன. பிற பயனர்கள் அவ்விடயத்தில் உதவ முடியும். எனவே, விக்கிபீடியா:கலைச்சொல் ஒத்தாசை பக்கம் ஒன்றை உருவாக்கினால் நன்று. இங்கே ஒத்தாசை பக்கம் போன்று சற்று விரைவாக பதிலிடும் வழக்கத்தை ஏற்படுத்தினால் நன்று. இங்கு எழும் விவாதங்களையும் விக்சனரிக்கு அல்லது அச்சொல்லின் தலைப்பில் உள்ள கட்டுரையின் உரையாடல் பக்கத்துக்கு எடுத்துசெல்லலாம்.


புதிய கலைச்சொற்கள் உருவாக்க வேண்டிய தேவை அவ்வப்பொழுது எழுகின்றது. இங்கு தமிழ் மொழியில் நன்கு தேர்ச்சி பெற்ற பயனர்கள் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. எனவே புதிய கலைச்சொல்லாக்கத்தின் பொழுது கவனிக்கபடவேண்டிய கூறுகள் அல்லது வழிமுறைகள், கலைச்சொல்லாக்க உத்திகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கையேடு பயனுள்ளதாக அமையலாம். அதை விக்கிபீடியா:கலைச்சொல்லாக்க கையேடு என்று பெயரிடலாம். (இப்படி ஒரு கையேடு தேவைதானா?)


எங்கு எங்கு எல்லாம் தமிழ் கலைச்சொற்கள் கிடைக்குமோ அவற்றையும் கீழே பட்டியலிடலாம்.

கலைச்சொற்கள் தொடர்பான விக்கிபீடியா பக்கங்கள்



இணையத்தில் கலைச்சொற்கள்

கலைச்சொல் அகராதிகள் பட்டியல்

  • * https://docs.google.com/file/d/0BzwpbxABzaV5SzVpQ24tY0NGVXc அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு
  • மணவை முஸ்தபா. (). அறிவியல் தொழிநுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி. சென்னை: Manavai Publications.
  • ப. அருளியார். (). தமிழில் அருங்கலைச்சொல் அகராதி. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்.
  • (1992). க்கிரியாவின் தற்கால தமிழ் அகராதி: தமிழ் - தமிழ் - ஆங்கிலம். சென்னை: க்கிரியா.
  • எஸ். நவராச் செல்லையா. (1984). விளையாட்டுத் துறையில் கலைச்சொல் அகர்ரதி. சென்னை: செல்லையா, ராஜ் மோகன் பதிப்பகம்.
  • கழகத் தமிழ் அகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522, டி.டி.கே சாலை, சென்னை 600 018. ரூபாய் 165. (பக்கங்கள் 884, தமிழ்-தமிழ் அகராதி)
  • (2002). நர்மதாவின் தமிழ் அகராதி. சென்னை: நர்மதா.
  • தகவல் தொழிநுட்ப கலைச்சொல் அகரமுதலி (நூல்)
  • அ.கி.மூர்த்தி, அறிவியல் அகராதி, மணிவாசகர் பதிப்பகம், 8/7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108 இந்திய ரூபாய் 150.00, முதல் பதிப்பு- டிசம்பர் 1994, திருத்திய பதிப்பு- நவம்பர் 1997. (842 பக்கங்கள், ஆங்கில சொற்கள் அகரவரிசைப்படி அமைத்த ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களும் விளக்கங்களும் உள்ளன)
  • கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி, வளர்தமிழ் மன்றம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600 025, டிசம்பர் 1998, ரூபாய் 50. (பக்கங்கள் 138. ஆங்கில சொற்கள் அகரவரிசைப்படி அமைத்த ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உள்ளன)
  • சக்தி. பி. சுப்பிரமணியன், சித்தர் மறைபொருள் அகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522, டி.டி.கே சாலை, சென்னை 600 018, பதிப்பாண்டு 2000, (262 பக்கங்கள், தமிழ்-தமிழ் அகராதி).

இணையத்தில் வைக்கப்பட்டுள்ள 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு பாடநூல்கள்

இணையத்தில் உள்ள அடிப்படை 10ஆம் வகுப்புப் பாடங்கள் (கேரள அரசு)-தமிழில்

தமிழில் இணையத்தில் மாணவர்களுக்கான இலவச பாடங்கள்

கலைச்சொல் ஆக்கர்கள்

வெளி இணைப்புகள்

என்ற விகுதி] - முனைவர் M. மெய்யப்பன்

ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya