விக்கிப்பீடியா:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

நோக்கம்

பெரியார் கலையரங்கம்

சேலம் பகுதியைச்சார்ந்த பொது மக்களுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம், தமிழக அரசின் வேலைவாய்ப்பு , பயிற்சித்துறையுடன் இணைந்து சேலம் சுழற்சங்கம் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தினை நிகழ்த்த உள்ளது.

நிகழிடம்

தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கின் வரவேற்புப் பதாகை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திலுள்ள பெரியார் கலையரங்கம்.

நாள், நேரம்

09.11.2013 அன்று 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை.

நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை:

  • பேராசிரியர் முனைவர். இரா. வெங்கடாசலபதி , ஒருங்கிணைப்பாளர் , பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம்.

சிறப்புரை:

  • திரு. மா. தமிழ்ப்பரிதி, துணைப்பேராசிரியர், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை மற்றும் பேரா.முனைவர். இரா. வெங்கடாசலபதி
  • விக்கிமீடியா கருத்தாளர்கள்: திரு. தகவல் உழவன், திருமதி. பார்வதிஸ்ரீ

பயிலரங்கப்பொருண்மைகள்

இந்நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்க

இப்பயிலரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயரை தமிழகம் என்னும் வலைதளத்தில் பதிவு செய்து, 09.11.2013 அன்று நிகழ உள்ள பயலரங்கிலோ பங்கேற்கலாம். இப்பயிலரங்கம் குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர் +91-9750933101, +91-9442105151 ஆகிய இரு எண்களில் தொடர்பு கொள்ளலாம். பெயர்ப்பதிவு செய்து கொண்டவர்களுக்கு நிகழ்வில் பங்கேற்க முன்னுரிமை அளிக்கப்படும்.

ஊடகங்கள்

முன் பணிகள்

26 அக்டோபர் 2013

9 நவம்பர் 2013

வெளி இணைப்புகள்

  1. தமிழகம்.வலை அறிவிப்பு
  2. விக்கி செய்தியில்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya