விக்கிப்பீடியா:ஏப்பிரல் 29, 2013 வவுனியா தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை
கொழும்பு தமிழ் ஆவண மாநாடு 2013 ஐ ஒட்டியதாக விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை மேற்கொள்ளல் தொடர்பாக ஆலமரத்தடியில் நடந்த உரையாடலின் படி கொழும்பு மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை நடந்தது.
கட்டற்ற உள்ளடக்கம், கட்டற்ற கலைக்களஞ்சியம் அறிமுகம் - மு. மயூரன்.
தமிழ் விக்கிப்பீடியாவில் உலாவுதல், கட்டுரைகள் உருவாக்கல், பயனர் சமூக அறிமுகம் - இரவி.
பட்டறையை ஒழுங்குபடுத்தல் - பணிகள்
மண்டப மற்றும் ஒழுங்குகள் - வவுனியா வளாகம்
நிகழ்ச்சிக் குறிப்புகள்
மயூரன் பேசுகிறார்
சஞ்சீவி சிவகுமாரின் வேண்டுகோளுக்கு இணங்க, வவுனியா வளாகத்தின் முதுநிலை உதவிப் பதிவாளரான திரு. கணேசலிங்கம் அவர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். வவுனியா சென்று இறங்கியது முதல், தங்குவதற்கான இடம், போக்குவரத்து, உணவு, நிகழ்ச்சி நடத்துவதற்கான கணினி ஆய்வகம் / உரையாற்றுவதற்கான அரங்கம் ஆகியவற்றுக்குச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அவருக்கு முதற்கண் எமது நன்றி !
முதலில் அங்குள்ள ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான அறிமுகமாக கணினி ஆய்வகத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கினோம். ஆனால், சிறிது நேரத்திலேயே மாணவர்களும் இணைந்து பெருங்கூட்டமானதால், கலையரங்குக்கு நிகழ்ச்சியை மாற்றினோம். இவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் மாணவிகள்.
இரவி பேசுகிறார்.
Data card கொண்டு நேரடியாக விக்கிப்பீடியா பக்கங்களில் உலாவிக் காட்டி விளக்கத்தை அளித்தோம். வவுனியா, இலங்கை சார்ந்த உள்ளடக்கங்கள் பெருமளவு இருந்தது கலந்து கொண்டோரின் கவனத்தை ஈர்த்தது.
கலந்து கொண்ட மாணவர் ஒருவரின் பாடசாலையைப் பற்றிய கட்டுரையை துவக்கிக் காட்டி விக்கிப்பீடியாவைப் பற்றி விளக்கினோம்.
பள்ளி / கல்லூரி / பல்கலைச் சூழலில் நடத்தப்படும் இது போன்ற பட்டறைகளில் சற்று இறுக்கம் நிலவுவது போல் தோன்றுகிறது. உடனடி விளைவுகள் எதிர்பார்க்க முடியாது என்றாலும், யாராவது என்றாவது ஒரு நாள் விக்கிப்பீடியா பக்கம் வந்து சேர வாய்ப்பிலை என்று சொல்ல முடியாது :) உடனடி விளைவுகளைக் காட்டிலும், விக்கிப்பீடியா போன்ற ஒரு பரவலர் இயக்கம், மரபார்ந்த கல்விச் சூழல்களில் முறையான அறிமுகம் பெற முடிகிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
கொழும்பில் உள்ள மாணவர்களுக்கும் இவர்களுக்கும் பல வேறுபாடுகளைக் காண முடிந்தது. பலர் கணினி, இணையத்தைப் பயன்படுத்தாதவர்களாக இருந்தார்கள்.
இது போன்ற பட்டறைகள் நடத்தச் செல்வோர், முன்கூட்டியே விக்கிப்பீடியாவின் முக்கிய பக்கங்கள், பட்டறைக்குத் தொடர்புடைய பக்கங்களின் திரைக்காட்சிகளை எடுத்து வைத்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும். ஒரு வேளை, இணைய இணைப்பு சொதப்பினாலும், இந்த திரைக்காட்சிகளைக் கொண்டு பட்டறையை நடத்த முடியும்.