கிழக்குப் பல்கலைக் கழக ஊழியர் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையுடன் தற்போது கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விக்கிபீடியா பயிற்சிப்பட்டறை வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக் கழக ஊழியர் மேம்பாட்டு மையத்தின் தலைவர் முனைவர். பெ. வினோபாபா அவர்களது அறிமுக உரையைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஆரம்பமானது.
ஆரம்பத்தில் இணையத் தொடர்பில் சிறிய தடங்கல் ஏற்பட்டாலும் தற்போது மிகவும் சுவாரசியமான முறையில் தொடர்கிறது.
சஞ்சீவி சிவகுமார் பயிற்சிப்பட்டறையை நடாத்துகிறார். பயனர் அனைவரும் பல்கலைக்கழக விரவுரையாளர்கள் ஆகும்.
பயிற்சிப் பட்டறையில் இருந்து செ.சாந்தரூபன்
நிகழ்வு பற்றிய குறிப்புகள்
பயிற்சிப் பட்டறை முன்னர் நடைபெற்ற கிழக்குப் பல்கலைக் கழக தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிழக்குப் பல்கலைக் கழக ஊழியர் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் முனைவர். பெ.வினோபாபா அவர்கள் அறிமுகம் செய்து ஆரம்பித்து வைத்தார். 43 பங்குபற்றுனர்கள் பங்குகொண்டனர். சஞ்சீவி சிவகுமார் மற்றும் செ.சாந்தரூபன் பட்டறையை வழி நடத்தினர்.
பட்டறையில் பங்குபற்றியவர்களில் மூவர் தாம் ஏற்கனவே ஆங்கில விக்கியில் தேடல் செய்திருப்பதாகத் தெரிவித்தனர். ஏனையவர்களுக்கு விக்கி புதியதாயிருந்தது.
குறைபாடுகள்
பட்டறை ஆரம்பத்தில் ஏற்பட்ட இணைய இணைப்பு கோளாறுகள் காரணமாக அரை மணி நேரத்திற்கு மேல் வெறும் உரை அறிமுகமே செய்ய முடிந்தது.
இணையத்தின் வேகம் மிக மந்தமாயிருந்ததால் பல விடயங்களை செயற்படுத்திக் காட்ட முடியாமையும் நேர விரயமும் ஏற்பட்டது.
இத்தகைய பட்டறைகளில் பங்குபற்றுனர் தாமாக செயற்படுத்திப் பார்க்கும் போது ஒவ்வொருவரும் வேறுபட்ட உதவிகளைக் கோருவர். எனவே 3-4 பயனர்களாவது பட்டறையின் போது இருப்பின் வினைத்திறன் உள்ளதாயிருக்கும்.
முதலாவது பட்டறையில் விளக்கியதை விட குறைவானதாக விடயங்களையே கையாள முடிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.