விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பிதொடுப்பிணைப்பி என்பது விக்கிப்பீடியாவின் பக்கங்களில் அத்தியாவசியமான துப்புரவு வார்ப்புருக்களைச் சேர்க்க உதவும் ஒரு கருவியாகும். இது மேல்-விக்கிப் பயனர் ஹூ மேனால் நீக்கல் வார்ப்புருக்களைப் ({{delete}}) பக்கங்களில் இணைப்பதற்காக எழுதப்பட்ட நிரல்வரியாகும். இது தமிழ் விக்கிப்பீடியாவில் மேலும் பல துப்புரவு வார்ப்புருக்களையும் பக்கங்களில் சேர்க்கும் வகையில் சூர்யபிரகாசால் தனிப்பயனாக்கப்பட்டது. இத்தனிப்பயனாக்கத்தின் போது ஏற்பட்ட பல இடர்ப்பாடுகளையும் களைவதற்கு ஸ்ரீகாந்தும் சோடாபாட்டிலும் முன்வந்து வழு திருத்தத்தில் ஈடுபட்டனர். கருவி பற்றிய கருத்துகளை தொடுப்பிணைப்பி குறித்த கருத்துகள் எனும் பக்கத்தில் தெரிவிக்கலாம். :) நிறுவல்கருவியாக நிறுவ
நிரல்வரியாக நிறுவ
importScript('பயனர்:Surya_Prakash.S.A./தொடுப்பிணைப்பி.js');
பயன்படுத்துதல்1. தொடுப்பிணைப்பியை நட்சத்திரக் குறிக்கும் தேடுபெட்டிக்கும் அருகில் இருக்கும் கீழ் நோக்கு அம்புக் குறியைப் (Down arrow) பயன்படுத்துவதன் மூலம் பெறலாம்.
2. பின்னர் படத்தில் காட்டியபடி தொடுப்பிணைப்பி காட்சியளிக்கும்.
3. அதன்பிறகு குறிப்பிட்ட கட்டுரைக்குத் தேவையான வார்ப்புருவைப் பட்டியலிலிருந்து தேர்வு செய்யவும்.
4. இறுதியாக "பக்கத்தில் தொடுப்பையிணைக்கவும்" என்பதைச் சொடுக்கவும்.
எதிர்பார்ப்பவைஇக்கருவியைப் பயன்படுத்திப் புதிய பயனர்களுக்கு {{புதுப்பயனர்}} வார்ப்புருவையும் புகுபதிகை செய்யாதவர்களுக்கு {{anonymous}} வார்ப்புருவையும் அவர்களது பேச்சுப் பக்கத்தில் இணைத்தல். தற்போது சிறீகாந்த்தும் சோடாபாட்டிலும் இதற்கான நிரலைச் சரிபார்த்து வருகின்றனர். விரைவில் இந்த வசதியும் தொடுப்பிணைப்பியில் வேலை செய்யும். |
Portal di Ensiklopedia Dunia