விக்ரம் தர்மா

விக்ரம் தர்மா
Vikram Dharma
பிறப்புஆர். என். தர்மசீலன்
1956
தமிழ்நாடு, இந்தியா
இறப்பு28 ஜூன் 2006
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி
  • நடிகர்
  • சண்டைப்பயிற்சியாளர்
செயற்பாட்டுக்
காலம்
1979–2006

விக்ரம் தர்மா (பிறப்பு ஆர். என். தர்மசீலன் ; 1956 - 28 ஜூன் 2006) தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றிய ஓர் இந்திய சண்டைப்பயிற்சியாளர் ஆவார். இவர் எம்ஜிஆரின் திரைப்படங்களில் பணியாற்றிய சண்டைப்பயிற்சியாளர் ஆர். என். நம்பியாரின் மகன்.[1][2] இவர் நடிகர் கமல் ஹாசனுடன் பல படங்களில் பணியாற்றினார்.[3] 1986ஆம் ஆண்டு வெளியான கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் நடித்த பிறகு விக்ரம் தர்மா என்று பெயரிடப்பட்டு 1988ஆம் ஆண்டு வெளியான கமல் ஹாசனின் சத்யா திரைப்படத்தில் சண்டைப்பயிற்சியாளராக அறிமுகமானார். சண்டைப்பிற்சியாளர்கள் மற்றும் நடிகர்களான பொன்னம்பலம், ஸ்டன் சிவா, தளபதி தினேஷ், அனல் அரசு, கே. கணேஷ் குமார், ராம் லக்ஷ்மன், சுப்ரீம் சுந்தர், அன்பரிவ், மகாநதி சங்கர், பெசன்ட் ரவி, ராஜேந்திரன், இந்தியன் பாஸ்கர், சாய் தீனா, அழகு மற்றும் வெங்கல் ராவ் இவரிடம் சண்டைக் காட்சிக் கலைஞர்களாகவும், உதவியாளர்களாகவும் பணியாற்றியவர்களாவர்.[4][5][6] இவர் 2006 ஜூன் 28 அன்று தன் 50 வயதில் மாரடைப்பால் சென்னையில் இறந்தார்.[7]

தொழில்முறை

சண்டைக்காட்சி கலைஞர்

விக்ரம் தர்மா தனது திரைப்பயணத்தை 1979ஆம் ஆண்டில் வெளியான கல்யாணராமன் திரைப்படத்தில் கமல் ஹாசனுக்கு சண்டைக்காட்சி கலைஞராக ஆரம்பித்தார். சண்டைப்பிற்சியாளர்கள் மற்றும் நடிகர்களான ஜூடோ. கே. கே. ரத்னம் மற்றும் V. கிருபாநிதியிடம் இவர் சண்டை கலைஞராகப் பணியாற்றினார்.

உதவி சண்டைப்பயிற்சியாளர்

1983ஆம் ஆண்டில் ஜூடோ. கே. கே. ரத்னமிடம் உதவி சண்டைப்பயிற்சியாளராக பணியாற்றினார்.[8][9]

நடிகர்

1983ஆம் ஆண்டில் இருந்து தான் சண்டைக்காட்சி கலைஞராகவும், உதவி சண்டைப்பயிற்சியாளராகவும் பணியாற்றிய திரைப்படங்களில் சிறு கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். கமல் ஹாசன் மற்றும் இயக்குனர் ராஜசேகரின் படங்களில் பணியாற்றியதன் மூலம் தங்களுக்கு ஏற்கனவே பரிட்சயமான விக்ரம் தர்மாவுக்கு 1986ஆம் ஆண்டில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்தனர். அத்திரைப்படத்திற்கு பிறகு தான் ஆர். என். தரம்சீலன் விக்ரம் தர்மா என்று பெயரிடப்பட்டார்.[10][11]

சண்டைப்பயிற்சியாளர்

1988ஆம் ஆண்டில் வெளியான சத்யா திரைப்படத்தில் கமல் ஹாசன் மற்றும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா விக்ரம் தர்மாவுக்கு முதன் முதலில் சண்டைப்பயிற்சியாளராக வாய்ப்பளித்தனர்.[12] விக்ரம் தர்மா சண்டைப்பயிற்சியாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் சத்யா என்றாலும் இவர் சண்டைப்பயிற்சியாளராக பணியாற்றியதில் முதலில் வெளியான திரைப்படம் 1987ஆம் ஆண்டில் வெளியான வைராக்கியம். பின்னர் இவர் பல பிரபல நடிகர்களுடன் பணியாற்றி திரைப்படத்துறையில் தவிர்க்க முடியாத சண்டைப்பயிற்சியாளர் ஆனார். குறிப்பாக கமல் ஹாசனுடன் பல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்,[13][14] அவற்றில் சத்யா, அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, குணா, தேவர் மகன், மகாநதி, இந்தியன், ஹே ராம், ஆளவந்தான், விருமாண்டி போன்ற திரைப்படங்களில் அவர் அமைத்த சண்டைக்காட்சிகள் பாராட்டப்பட்டது, அவற்றில் சில திரைப்படங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டது. இவர் வணிகரீதியாக திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல் எதார்த்த திரைப்படங்களுக்கும் ஏற்ப சண்டைக்காட்சிகள் அமைத்திருந்தார்.

ஆரம்பகால மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

விக்ரம் தர்மா எம்ஜிஆரின் திரைப்படங்களில் சண்டைப்பயிற்சியாளராக பணியாற்றிய ஆர். என். நம்பியாரின் மகன்.

விக்ரம் தர்மா பீனா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு பிரியங்கா என்ற மகளும், ரோஷன் என்ற மகனும் உள்ளனர்.[15]

விருதுகளும் கௌரவங்களும்

  • 1990 சிறந்த சண்டைப்பயிற்சியாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருது - நடிகன்
  • 1992 சிறந்த சண்டைப்பயிற்சியாளருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - தேவர் மகன்
  • 1993 சிறந்த சண்டைப்பயிற்சியாளருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - ஜெண்டில்மேன்
  • 1994 சிறந்த சண்டைப்பயிற்சியாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருது - மகாநதி[16]
  • 1997 சிறந்த சண்டைப்பயிற்சியாளருக்கான தினகரன் விருது - பல படங்கள்
  • 2002 சிறந்த சண்டைப்பயிற்சியாளருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - கன்னத்தில் முத்தமிட்டால்
  • 2004 சிறந்த சண்டைப்பயிற்சியாளருக்கான பிலிம் டுடே விருது - விருமாண்டி, ஆய்த எழுத்து

மேற்கோள்கள்

  1. "Vikram Dharma is no more". Mymaaza.com. 29 June 2006. Retrieved 4 March 2020.
  2. "Kamal Haasan's Open Talk about the Background of his Stuntmen". Hindu Tamil Thisai. 29 June 2006. Retrieved 4 March 2020.
  3. "Vikram Dharma passes away". Sify Movies. 4 May 2020. Archived from the original on 22 December 2015. Retrieved 2 July 2020.
  4. "நடிகர் அர்ஜுனுடன் போட்டி போடும் பிரசன்னா மறக்காமல் பாருங்கள் வீக்கெண்ட் வித் ஸ்டார்ஸ் - பகுதி 08". Youtube. 30 August 2018. Archived from the original on 2021-12-17. Retrieved 4 March 2020.
  5. "Vijayadashami Special - Cinema vil Original Fight Stunt Master - Thalapathy Dinesh October 22". Youtube. 26 October 2015. Archived from the original on 2021-12-17. Retrieved 4 March 2020.
  6. "Interview with Kollywood Personalities – 30 Minutes With Us – Rajashekar stunt master September 5". Youtube. 7 September 2015. Archived from the original on 2021-12-17. Retrieved 16 December 2015.
  7. "Stunt master Vikram Dharma dead". DNA. 28 June 2006. Retrieved 4 March 2020.
  8. "எம்ஜிஆருக்கு சண்டை சொல்லித் தர மறுத்த ஜூடோ ரத்தனம்! அறியப்படாத தகவல்கள்!". Hindustan Times Tamil. 26 January 2023. Retrieved 2 March 2025.
  9. "சினிமா சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவு". Dina Malar. 27 January 2023. Retrieved 2 March 2023.
  10. "Vikram calling the shots". The New Indian Express. 30 May 2022. Retrieved 2 March 2022.
  11. "30 facts of Vikram 1986 before you watch Lokesh Kanagaraj's Vikram". Cinema Express. 2 Jun 2022. Retrieved 2 March 2025.
  12. "Vikram Dharma-ஓட First Flim இது..! - The SS Podcast Ft. Suresh Krissna". YouTube. 10 February 2025. Retrieved 2 March 2025.
  13. "Ulaganayagan Kamal Haasan Speech - Vikram Audio Launch - Turmeric Media". 4 August 2022. Retrieved 2 March 2025.
  14. "நிறைவேறாமல் போன கமல் ஆசை... அதனால் தான் 237வது படத்துக்கு இயக்குனர் அவர்களா?". Cinereporter. 27 January 2025. Retrieved 2 March 2025.
  15. "ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மா மரணம்". Oneindia. 29 June 2006. Retrieved 2 March 2025.
  16. Dhananjayan, G. (3 November 2014). "PRIDE OF TAMIL CINEMA: 1931 TO 2013: Tamil Films that have earned National and International Recognition". Retrieved 2 July 2020.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya