வின்வர்டு தீவுகள்
வளிப்புறத் தீவுகள் அல்லது வின்வர்டு தீவுகள் (Windward Islands) மேற்கிந்தியத் தீவுகளில் சிறிய அண்டிலிசின் தெற்கிலுள்ள, பொதுவாக பெருந்தீவுகள் ஆகும். இவை வளிமறைவுத் தீவுகளுக்கு தெற்கே உள்ளன. நிலநேர்க்கோடுகள் 12°வடக்கிற்கும் 16° வடக்கிற்கும் இடையிலும் நிலநிரைக்கோடுகள் 60°மேற்கிற்கும் 62° மேற்கிற்கும் இடையிலும் இத்தீவுகள் அமைந்துள்ளன. இத்தீவுக் குழுமம் டொமினிக்காவில் துவங்கி தெற்குநோக்கி நீண்டு டிரினிடாட் மற்றும் டொபாகோவின் வடக்கு வரை பரந்துள்ளன. பெயரும் புவியியலும்பாய்க்கப்பல்களின் காற்றுவீசும் பக்கத்தில் இருந்தமையால் இவை வளிப்புறத் தீவுகள் என்றழைக்கப்பட்டன. பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளில் வணிகக் காற்று பொதுவாக கிழக்கிலிருந்து மேற்காக வீசும்; எனவே புதிய உலகிற்கு வந்த கப்பல்களுக்கு வளிமறைவுத் தீவுகளை விட இத்தீவுகளில் காற்று சாதகமாக இருந்தது. அத்திலாந்திக்குப் பெருங்கடல் நீரோட்டங்களும் காற்று வீசும் திசைகளும் இக்கபல்களுக்கு மிக விரைவாக பெருங்கடலைக் கடக்க உதவிய வழி இத்தீவுக் குழுமத்தை வளிப்புறத் தீவுகள் என்றும் வளிமறைவுத் தீவுகள் என்றும் பிரித்தன. டொமினிக்கா மையமாகக் கொண்டு இந்த பிரிவுக்கோடு ஏற்பட்டது. குவாதலூப்பேயும் தெற்கிலுள்ள தீவுகளும் "வளிப்புறத் தீவுகள்" எனப்பட்டன. பின்னர், மர்தினிக்கு தீவின் வடக்கிலிருந்த அனைத்தும் லீவர்டு தீவுகள் அல்லது வளிமறைவுத் தீவுகள் எனப்பட்டன. அடிமை வணிகத்திற்காக ஆப்பிரிக்காவின் தங்கக் கடற்கரையிலிருந்தும் கினி வளைகுடாவிலிருந்தும் கிளம்பும் கப்பல்கள்மேற்கு-வடமேற்கு திசையில் கரிபியன், வட மற்றும் நடு அமெரிக்காக்களை நோக்கி பயணிக்கும்போது முதலில் சிறிய அண்டிலிசின் மிகத்தென்கிழக்கிலுள்ள தீவுகளை எதிர்கொள்வர். இத்தீவுக் கூட்டம் கரிபியக் கடலின் மிகக்கிழக்கு எல்லையாக விளங்குகின்றன.[1][2] தற்போதைய "வளிப்புறத் தீவுகளில்" பெரும்பாலானவை ஒருகாலத்தில் பிரான்சு ஆட்சியில் பிரான்சிய அண்டிலிசின் பகுதியாக இருந்தவையாகும். வளிப்புறத் தீவுகள் (வின்வர்டுத் தீவுகள்):[1][3]
|
Portal di Ensiklopedia Dunia