வி. ஆர். கிருஷ்ணன் எழுத்தச்சன்
வி. ஆர். கிருஷ்ணன் எழுத்தச்சன் (V.R.Krishnan Ezhuthachan) (1909-2004) ஓர் இந்திய விடுதலை வீரரும், காந்தியவாதியும், பத்திரிகையாளரும், தொழிற்சங்கவாதியும், தென்னிந்திய மாநிலமான கேரளாவிலுள்ள திருச்சூர் நகரத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசுக் கட்சித் தலைவரும் ஆவார்.[1] எழுத்துச்சன் 26 ஜனவரி 1941 இல் நிறுவப்பட்ட கொச்சி ராஜ்ய பிரஜாமண்டலம் என்ற அரசியல் கட்சியின் நிறுவனர் பொதுச் செயலாளராக இருந்தார். திருச்சூரிலிருந்து வெளியிடப்பட்ட தீனபந்து நாளிதழையும் நிறுவி நடத்தி வந்தார்.[2][3][4][5][6] தனிப்பட்ட வாழ்க்கைஎழுத்தச்சன் 25 ஏப்ரல் 1909 அன்று திருச்சூரில் அவிணிசேரியில் வடக்கூட்டு நெல்லிபரம்பில் ராமன் எழுத்தச்சன் - ஞரசேரி வளப்பில் இலட்சுமி அம்மா ஆகியோரின் பத்தாவது மகனாகப் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை திண்ணைப்பள்ளியில் (பழைய பாரம்பரிய கிராமப் பள்ளி) முடித்தார்.[7] ![]() 10-ம் வகுப்பில் தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்ற பிறகு, இவர் பொருளாதாரம் , இளங்கலை சட்டம் பட்டம் பெற்றார். 1925இல் காந்திஜி திருச்சூர் வந்தபோது, எழுத்தச்சன் அவரைச் சந்தித்து, பின்னர் சுதந்திரப் போராட்டத்தில் இறங்கினார். கொச்சி மாநில காங்கிரசு கட்சியின் தீவிர உறுப்பினரான பி.குமாரன் எழுத்தச்சன் அரசியலில் இவருக்கு வழிகாட்டியாக இருந்தார்.[8][9][6] ![]() இலக்கியப் பணிஎழுத்தச்சன் இலக்கியத் துறையிலும் பங்களிப்பைக் கொண்டுள்ளார். இவர் ஒரு கவிஞரும் கூட. 2000 ஆம் ஆண்டில் இவர் தனது வி.ஆர்.கிருஷ்ணன் எழுத்தச்சன் என்ற சுயசரிதைக்கு கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.[10][11] அங்கீகாரம்இந்திய சுதந்திர இயக்கத்தில் சிறந்த சேவை செய்ததற்காக எழுத்தச்சனுக்கு நாடு தாமிரப்பட்டயம் வழங்கி கௌரவித்தது. 1931ஆம் ஆண்டு "கிராமோதாரணம்" என்ற ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழகம் விருது வழங்கியது. சதானந்தன் விருது, இந்தியாவின் கூட்டுறவு இயக்கத் துறையில் செய்த பங்களிப்புக்கான பேராசிரியர். கீழ்க்காயல் மத்தாய் சாண்டி விருது, கேரள பத்திரிகை அறக்கட்டளையின் "சுயாதீன கனகோபகாரம்", சமூக மற்றும் இலக்கியத் துறைகளில் சிறந்த சேவைக்காக "ராமாஸ்ரம" விருது. திருச்சூர் "சஹ்ருதயா வேதி" விருது, "தோமியாஸ்" விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார்.[7] மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia