காந்தியவாதம் அல்லது காந்தியம் (Gandhism) என்று மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் வாழ்நாள் பணி, கருத்தாக்கம் மற்றும் உள்ளூக்கத்தால் பெறப்பட்ட கொள்கைகளையும் கருத்துகளையும் உள்ளடக்கிக் கூறப்படுகின்றது. முக்கியமாக அகிம்சைப் போராட்டம் குறித்த அவரது கருத்துக்களும் செயல்முறைகளும் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.
'காந்தியம்' என்ற கருத்தாக்கத்தில் உலகெங்கும் உள்ள மக்களுக்கான காந்தியின் உரைகளும் செயல்பாடுகளும் மற்றும் அவர்களது மேம்பாட்டிற்காக அவரது வழிகாட்டுதல்களும் உள்ளடக்கப்படுகிறது. மேலும் இது தனிமனிதச் சூழலுக்கும் அரசியல் சாரா சூழலுக்கும் பொருந்துவதாகவும் உள்ளது. காந்தியத்தைப் பின்பற்றுபவர்கள் காந்தியவாதிகள் எனப்படுகின்றனர். காந்தியை இருபதாம் நூற்றாண்டின் புத்தராக ராம்ஜி சிங் என்ற அறிஞர் கருதுகிறார்.[1]
இருப்பினும் காந்தி 'காந்தியத்தை' அங்கீகரிக்கவில்லை:
" 'காந்தியம்' என்று எதுவுமில்லை மற்றும் நான் எனக்குப் பின்னர் எந்தவொரு உட்குழுவையும் விட்டுச் செல்ல விரும்பவில்லை. நான் எந்தவொரு புதிய கொள்கையையோ தத்துவத்தையோ அறிமுகப்படுத்தியதாக உரிமை கோரவில்லை. நான் நமது தினசரி வாழ்விலும் சிக்கல்களிலும் என்றுமுள்ள உண்மைகளை நானறிந்த வழியில் பயன்படுத்தி முயன்றுள்ளேன்...எனக்குக் கிட்டிய கருத்துக்களும் தீர்வுகளும் இறுதியானவையல்ல. நாளையே எனது கருத்துக்களையும் தீர்வுகளையும் மாற்றிக் கொள்ளலாம். உலகிற்கு கற்றுக் கொடுக்க என்னிடம் எதுமில்லை. வாய்மையும் அகிம்சையும் மலைகளைப் போன்று பழைமையானவை".[2]
சான்றுகோள்கள்
↑Nicholas F. Gier (2004). The Virtue of Nonviolence: From Gautama to Gandhi. SUNY Press. p. 222. ISBN978-0-7914-5949-2.