கோழிக்கோடு பல்கலைக்கழகம்
கோழிக்கோடு பல்கலைக்கழகம் (University of Calicut), தென்னிந்தியாவில் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் தேஞ்ஞிப்பலத்தில் அமைந்துள்ளது. வகுப்புகள்இப்பல்கலைக்கழகம் கோழிக்கோடு நகரத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் மலப்புறம் மாவட்டத்தில் தேஞ்ஞிப்பலத்தில் அமைந்துள்ளது. இங்கு மைய நூலகமும், விடுதிகளும் உள்ளன.
இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள்கோழிக்கோடு மாவட்டத்தில் 70, திருச்சூர் மாவட்டத்தில் 68, மலப்புறம் மாவட்டத்தில் 70, பாலக்காடு மாவட்டத்தில் 43, வயநாடு மாவட்டத்தில் 11 உட்பட மொத்தம் 262 கல்லூரிகள், இந்த பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவையில் 115 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 53 பயிற்சிக் கல்லூரிகளும், 23 பொறியியல் கல்லூரிகளும், 5 மருத்துவக் கல்லூரிகளும், 4 ஆயுர்வேத கல்லூரிகளும், 2 சட்டக் கல்லூரிகளும், 23 அரபி கல்லூரிகளும், ஒரு நுண்கலைக் கல்லூரியும், 16 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளும் அடக்கம். இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia