வீரேந்திர கிசோர் மாணிக்கியா
வீரேந்திர கிசோர் மாணிக்கிய தேவ வர்ம பகதூர் (Birendra Kishore Manikya Debbarma Bahadur), திரிபுரா இராச்சியத்தை ஆண்டமாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார். 25 நவம்பர் 1909 அன்று தனது 26வது வயதில் திரிபுரா இராச்சியத்தின் அரியணை ஏறினார். நிர்வாகச் சீர்திருத்தங்கள்மாநிலத்திற்கு வீரேந்திர கிசோரின் பங்களிப்பு நிர்வாக சீர்திருத்தங்கள், நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் கல்வியைப் பரப்புவதற்கான நிலையான முயற்சியில் அடங்கியுள்ளது. உட்பிரிவுகளின் மாதிரியில் மாநிலத்தை பத்து நிர்வாக அலகுகளாகப் பிரித்து, திறமையான இளைஞர்களை நிர்வாகத்தில் சேர்ப்பதற்கான பொதுப் பணித் தேர்வு முறையை 1909 இல் அறிமுகப்படுத்தினார். தலைமைச் செயலாளர் பதவி 1909 இல் உருவாக்கப்பட்டது. இவர் 1909 ஆம் ஆண்டில் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் பதவி உட்பட மாநிலத்தின் உயர் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக மாநில பொதுப் பணிச் சேவையை மறுசீரமைத்தார். புதிய ஆயுதச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத் திருத்தச் சட்டம் 1911 இல் நிறைவேற்றப்பட்டன. மூத்த காவல் ஆய்வாளரின் கீழ் ஒரு சிறிய பணியாளர் துப்பறியும் நோக்கங்களுக்காக ஈடுபடுத்தப்பட்டார். மாநிலத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை எப்போதும் குறைவாகவே இருந்தது.[1] வீரேந்திர கிசோர், திரிபுராவில் தேயிலை சாகுபடியின் சாத்தியக்கூறுகளை ஆராயும் முதல் முயற்சியாக ஒரு நிபுணர் குழுவின் ஆய்வுக்கு உத்தரவிட்டார். இவரது ஆட்சியில் திரிபுராவில் நாற்பது தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டன. 1916 ஆம் ஆண்டு திரிபுராவில் எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் கனிமங்களை ஆராய்வதற்காக பர்மா எண்ணெய் நிறுவனத்திற்கு ஒரு முறையான உரிமத்தை மன்னர் வழங்கினார். அகர்தலாவில் பட்டு நெசவு மையத்தை நிறுவி விவசாயத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார்.ref>"Leading lights among the Manikyas". www.tripurainfo.in. Archived from the original on 9 ஜூலை 2024. Retrieved 31 May 2012. கலைகளின் புரவலர்ஒரு கலைஞரும் சிறந்த பாடலாசிரியருமான, வீரேந்திர கிசோர் "சன்னியாசி", "ஜூலோன்" மற்றும் "பன்ஷி பதான்" போன்ற அழகிய எண்ணெய் ஓவியங்களுக்காக அறியப்பட்டார். திரிபுராவில் நாடக வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்து உஜ்ஜயந்தா நாடக நிறுவனத்தை நிறுவினார். [2] உஜ்ஜயந்தா அரண்மனையின் ஒரு பகுதியாக இருக்கும் இலட்சுமி நாராயண் கோயில், 'துர்கா பாரி' மற்றும் 'லால் மகால்' இவரது ஆட்சியின் போது கட்டப்பட்டது. இப்போது திரிபுரா ஆளுநரின் இல்லமாக இருக்கும் புஷ்பந்தா அரண்மனையையும் இவர் கட்டினார். [3] 1913 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற பிறகு இரவீந்திர நாத் தாகூருக்கு அகர்தலாவில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை மன்னர் ஏற்பாடு செய்தார்.[4] சாந்தி நிகேதனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்ததோடு மட்டுமல்லாமல், அங்கு மருத்துவமனை அமைப்பதற்காக தாகூருக்கு 5,000 ரூபாய் நன்கொடை அளித்தார்.[5] சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia