வீர் விக்ரம் கிசோர் தேவ வர்மன் மாணிக்கிய பகதூர்
வீர் விக்ரம் கிசோர் தேவ வர்மன் மாணிக்கிய பகதூர் (Bir Bikram Kishore Debbarma Manikya Bahadur, 19 ஆகத்து 1908 – 17 மே 1947) 20ம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில், திரிபுரா இராச்சியத்தை ஆண்டமாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார்.[1][2][3][4] இவருக்குப் பிறகு இவரது மகன் கிரித் விக்ரம் கிசோர் தேவ வர்மன், 1949 இல் மாநிலத்தின் திரிபுரா இணைப்பு ஒப்பந்தம் ஏற்படும் வரை இரண்டு ஆண்டுகள் பெயரளவிலான மன்னராக இருந்தார். அப்போது இவருக்கு சிறுவயதாக இருந்ததால் இவரது தாயார் காஞ்சன் பிரவா தேவி தலைமையில் ஆட்சிக் குழு மூலம் நிர்வகிக்கப்பட்டது.[5] பின்னணிஇவரது தந்தையான வீரேந்திர கிசோர் மாணிக்கியவிற்குப் பின்னர் 1923ல் இவர் அரசரானார். இந்திய விடுதலைக்குப் பின்னர் திரிபுரா மன்னராட்சிப் பகுதி இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைந்துகொள்வதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர் வரை இவர் அரசராக இருந்தார். 1947ல் இவரது இறப்புக்குப் பின்னர் இவரது மகனான கிரிதி விக்ரம் கிசோர் மாணிக்கியா அரச பதவிக்கு உரியவரானார். எனினும் இவர் வயதில் குறைந்தவராக இருந்ததால் இவர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கவில்லை. 1949ல் திரிபுரா இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. தற்காலத் திரிபுராவுக்கான முழுத் திட்டமிடலும் இவர் காலத்திலேயே தொடங்கப்பட்டதால், இவர் திரிபுராவில் நவீன கட்டிடக்கலையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.[6][7] இவர் நிலச் சீர்திருத்தத்தின் முன்னோடிகளுள் ஒருவராகவும் உள்ளார். 1939ல் இவர் உள்ளூர் திரிபுராப் பழங்குடியினருக்காக நிலங்களை ஒதுக்கினார்.[8][9] இது பின்னர் திரிபுரா தன்னாட்சி மாவட்ட அவைகள் அமைப்பதற்கு தூண்டுகோலாக அமைந்தது. திரிபுராவின் முதல் வானூர்தி நிலையமும் இவர் காலத்திலேயே அமைக்கப்பட்டது. சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia