வீ. கருப்பசாமி பாண்டியன்

வீ. கருப்பசாமி பாண்டியன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்ஆலடி அருணா
பின்னவர்ஆர். நவநீத கிருஷ்ண பாண்டியன்
தொகுதிஆலங்குளம்
பதவியில்
1980–1984
முன்னையவர்நாஞ்சில் கி. மனோகரன்
பின்னவர்வி. எஸ். டி. சம்சுல் ஆலம்
தொகுதிபாளையங்கோட்டை
பதவியில்
2006–2011
முன்னையவர்கே. அண்ணாமலை
பின்னவர்சரத் குமார்
தொகுதிதென்காசி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1947-07-01)1 சூலை 1947
இறப்பு26 மார்ச்சு 2025(2025-03-26) (அகவை 77) [1]
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
வாழிடம்திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
தொழில்அரசியல்வாதி

வீ. கருப்பசாமி பாண்டியன் (1 சூலை 1947 - 26 மார்ச்சு 2025), தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்குமிக்க தலைவராகப் பணியாற்றினார்.  

வாழ்க்கை வரலாறு

கருப்பசாமி பாண்டியன் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான ம. கோ. இராமச்சந்திரனின் ஆதரவாளராக இருந்தார். இராமச்சந்திரனாலும் அதன்பிறகு கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா ஆகிய இருவராலும் 1972-இல் இருந்து கட்சியில் பல்வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டார். 1996-இல் இவர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.[2]

கருப்பசாமி பாண்டியன், 1977 தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் இருந்து அதிமுக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 1980-ஆம் ஆண்டு தேர்தல்களில் பாளையங்கோட்டை தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

பின்னர் 2000 மே 2 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அக்கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தார். 2006 தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5]

2015ஆம் ஆண்டு மே மாதம் திமுகவில் இருந்து தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், சூலை 26, 2016 இல் ஜெயலலிதாவின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். திசம்பர் 2016-இல் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர், வி. கே. சசிகலா இவரை கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமித்தார். பின்னர் வி. கே. சசிகலா, தினகரனை கட்சியின் துணைத் தலைமைச் செயலாளராக அறிவித்தார். 2011-இல் ஜெயலலிதாவுக்கு 'துரோகம்' செய்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை கட்சியின் உயர் பதவியில் நியமிப்பதை தன்னால் ஏற்க முடியாது என்று கூறி கருப்பசாமி பாண்டியன் தன் கட்சிப் பதவியைத் துறந்தார்.[6] கருணாநிதியின் மறைவையடுத்து திமுக தலைவராக மு. க. ஸ்டாலின் ஆன பிறகு 2018, ஆகத்து 31 அன்று மீண்டும் திமுகவில் இணைந்தார்.[7] இதனிடையே தனக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என ஆதங்கத்தில் இருந்த கருப்பசாமி பாண்டியன் பலமுறை கோரிக்கை வைத்தும் கவனிக்கப்படாமல் இருந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு விரக்தியில் இருந்தார். இதனால் திமுகவில் இருந்து விலகி, சனவரி 5, 2020இல் மீண்டும் அஇஅதிமுகவில் இணைந்தார்.[8]

இறப்பு

2025 மார்ச் 26 அன்று, கருப்பசாமி பாண்டியன் பாளையங்கோட்டை அருகே உள்ள அவரது வீட்டில் காலமானார்.

மேற்கோள்கள்

  1. https://www.dinamalar.com/news/tamil-nadu-news/aiadmk-leader-karuppasamy-pandian-passes-away/3888417
  2. "Karuppasamy Pandian back in AIADMK fold". The Hindu. 27 July 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Karuppasamy-Pandian-back-in-AIADMK-fold/article14510861.ece. பார்த்த நாள்: 2017-05-06. 
  3. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 188-189.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  4. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-23.
  5. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2017-06-23.
  6. Sudhakar, P. (15 February 2017). "Karuppasamy Pandian resigns as AIADMK organising secretary". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Karuppasamy-Pandian-resigns-as-AIADMK-organising-secretary/article17307279.ece. பார்த்த நாள்: 2017-05-06. 
  7. "கருப்பசாமி பாண்டியன், முல்லைவேந்தன் மீண்டும் திமுகவில் இணைந்தனர்". செய்தி. இந்து தமிழ். 31 ஆகத்து 2018. Retrieved 2 செப்டெம்பர் 2018.
  8. "நெல்லை கருப்பசாமி பாண்டியன் அதிமுகவில் இணைந்தார்".நக்கீரன் (05 சனவரி, 2020)
முன்னர் பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)
1980-1984
பின்னர்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya