வெகாரி மாவட்டம்

வெகாரி மாவட்டம்
ضلع وہاڑی
மாவட்டம்
மேல்: தபில் முகமது கல்லறை
கீழ்: அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெகாரி மாவட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெகாரி மாவட்டத்தின் அமைவிடம்
நாடுபாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
கோட்டம்முல்தான்
தலைமையிடம்வெகாரி
அரசு
 • வகைமாவட்டம் (மாவட்ட நிர்வாகி-துணை ஆணையாளர்
பரப்பளவு
 • மாவட்டம்4,364 km2 (1,685 sq mi)
மக்கள்தொகை
 (2023)[1]
 • மாவட்டம்34,30,421
 • அடர்த்தி790/km2 (2,000/sq mi)
 • நகர்ப்புறம்
7,82,915
 • நாட்டுப்புறம்
26,47,506
சராசரி எழுத்தறிவு
 • எழுத்தறிவு
  • மொத்தம்:
    (59.10%)
  • ஆண்:
    (66.43%)
  • பெண்:
    (51.57%)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
இடக் குறியீடு067
இணையதளம்vehari.punjab.gov.pk

வெகாரி மாவட்டம் (Vehari District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் வெகாரி நகரம் ஆகும்[3]. வெகாரி நகரம் நகரம் மாகாணத் தலைநகரான லாகூருக்கு தென்மேற்கே 333 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தெற்கே 534 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மாவட்ட எல்லைகள்

வெகாரி மாவட்டத்தின் வடமேற்கில் சாகிவால் மாவட்டம், வடகிழக்கில் பாக்பட்டான் மாவட்டம், கிழக்கில் பகவல்நகர் மாவட்டம், தென்கிழக்கில் பகவல்பூர் மாவட்டம் தெற்கில் லோத்ரன் மாவட்டம் மற்றும் மேற்கில் கானேவால் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 5,43,036 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 34,30,421 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 102.33 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 59.10% ஆகும்.[1][4] இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 940,756 (27.44%) ஆக உள்ளனர்.[5]நகர்புறங்களில் 782,915 (22.82%) மக்கள் வாழ்கின்றனர். [1]

சமயம்

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 99.12% மக்களும், இந்து சமயம் & கிறித்துவம் போன்ற சிறுபான்மை சமயங்களை 0.88% மக்கள் பின்பற்றுகின்றனர்.

மொழிகள்

இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழி 74.10%, சராய்கி மொழி 19.12%, உருது மொழி 5.83% மற்றும் பிற மொழிகளை 0.95% மக்கள் முதல் மொழியாகப் பேசுகின்றனர்.[6]

பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் 41 மாவட்டங்கள்

மாவட்ட நிர்வாகம்

வெகாரி மாவட்டம் 4 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:[7]

வருவாய் வட்டம்[8] பரப்பளவு

(km²)[9]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)[10]

ஒன்றியக் குழுக்கள்
பூராவாலா வட்டம் 1,295 1,204,255 929.93 63.98% ...
மைல்சி வட்டம் 1,639 1,120,407 683.59 54.63% ...
வெகாரி வட்டம் 1,430 1,105,759 773.26 58.21% ...
ஜல்லா ஜீம் வட்டம் ... ... ... ... ...

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  2. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
  3. "PAKISTAN: Punjab: Population of Districts". Citypopulation.de website. Archived from the original on 29 April 2020. Retrieved 30 May 2023.
  4. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  5. "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "Tehsils & Unions in the District of Vehari". National Reconstruction Bureau, Government of Pakistan website. Archived from the original on 2012-08-05. Retrieved 30 May 2023.
  8. Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம் Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
  9. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
  10. "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya