பாக்பட்டான் மாவட்டம் (Pakpattan District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பாக்பட்டான் நகரம் ஆகும். இந்நகரமானது பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூருக்கு தென்மேற்கே 194 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தெற்கே 469 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 344,546 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 2,136,170 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு ஆண்கள் 103.30 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 57.13% ஆகும்.[1][3]இதன் மக்கள் தொகையில் 613,557 (28.73%) பேர் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.[4]நகர்புறங்களில் 472,575 (22.12%) மக்கள் வாழ்கின்றனர்.[1]
சமயம்
இம்மாவட்டத்தில் இசுலாம் 99.49% மற்றும் பிற சமயங்களை 0.51% பேர் பின்பற்றுகின்றனர்.[5]