வெண்வயிற்றுக் கரிச்சான்
வெண்வயிற்றுக் கரிச்சான் [White-bellied drongo (Dicrurus caerulescens)] என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டும் காணப்படும் ஒரு கரிச்சான் இனக் குருவியாகும். மற்ற கரிச்சான்களைப் போலவே இது பூச்சிகளை உண்ணும் வழக்கம் கொண்டிருந்தாலும், சில வகைப் பூக்களின் தேனை விரும்பி உண்பதால் மகரந்தச் சேர்க்கையிலும் இது உதவுகிறது[2]. துணையினங்கள்இதில் மூன்று துணையினங்கள் பரிந்திரைக்கபட்டுள்ளன:[3]
உடலமைப்பும் கள அடையாளங்களும்உடலமைப்புசின்னானை விட அளவில் பெரியது [நீளம் = 24 cm] கரிக்குருவியை விட சிறியது. வாலின் பிளவு கரிக்குருவியின் வால் பிளவை விடவும் குறைவாக இருக்கும். மார்பின் அடிப்பகுதியிலிருந்து வெள்ளையாக இருக்கும். கண்விழிப் படலம் அரக்கு நிறம். ஆண் பெண் இரண்டும் ஒரே தோற்றம் கொண்டிருக்கும்[4]. கள அடையாளங்கள்இரண்டு அல்லது மூன்று குருவிகள் மற்ற பூச்சியுண்ணும் பறவைகளுடன் சேர்ந்தே காணப்படும்; அந்தி நேரத்திலும் நன்கு இருட்டிய பிறகும் கூட இரையைத் தேடும். பரவலும் வாழ்விடமும்பரவல்மேற்கு குஜராத், மேற்கு ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள் நீங்கலாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகள் மற்றும் இலங்கையின் பெரும்பாலான பகுதிகள்[5]. இனப்பெருக்கம் செய்யாத காலங்களில் இவை மத்திய குஜராத் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன[6]. வாழ்விடம்இலையுதிர், மூங்கிற் காடுகளின் புதர்வெளிகள், தேயிலை, இரப்பர் தோட்டங்கள். உணவுசிதடி எனப்படும் பாச்சை, வெட்டுக்கிளி, விட்டில், சிறகுடைய கறையான் உள்ளிட்ட பூச்சிகள்; திடீர்த் தாக்குதல் மூலம் உணவை பிற பறவைகளிடமிருந்து அபகரிப்பதும் உண்டு. எப்போதாவது, நாணல் கதிர்குருவிகளைத் தாக்கி உண்ணும்; Bombax, Erythrina- தாவரங்களுடைய மலர்களின் தேனை உண்ணும். ஒலிபூங்குருவிகள், தினைக்குருவிகள் போன்றவற்றின் தொனியில் ஒலியெழுப்பும்; கரிக்குருவியைப் போன்றே பாடும். குறிப்பாக, தையல் சிட்டு, காட்டுக் கீச்சான், மாம்பழச் சிட்டு ஆகிய குருவிகளைப் போன்றே போலிக்குரல் எழுப்பும்[7][8]. படத்தொகுப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
|
Portal di Ensiklopedia Dunia