வெ. இராமலிங்கம் பிள்ளை
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (Venkatarama Ramalingam Pillai, அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) என்பவர் தமிழறிஞரும் கவிஞரும் ஆவார். கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டார். பின்னர், மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டு, அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் அகிம்சை பற்றியும் இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுகிறார். வாழ்க்கைக் குறிப்புஇராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன் பிள்ளை, அம்மணியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை மோகனூரில் காவல்துறையில் பணிபுரிந்து வந்தார். இவரின் தாயார் பக்தியுள்ள குடும்ப பெண்மணி ஆவார். இவர் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை ஆவார். அவர் தமது தொடக்கக் கல்வியை நாமக்கலிலும், உயர்நிலைக் கல்வியைக் கோயம்புத்தூரிலும் பயின்றார். 1909-இல் இளங்கலை கல்வியினைத் திருச்சிராப்பள்ளியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் பயின்றார். இவர் ஆரம்பகாலத்தில் நாமக்கல் வட்டாச்சியர் அலுவலகத்தில் எழுத்தாளராகவும், பின்னர்த் தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரசு தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரசு தலைவராகவும் பணியாற்றினார். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களைத் தேசத் தொண்டர்களாக மாற்றினார். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றினார். 1930-இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார். இவரின் மலைக்கள்ளன் நாவல் எம். ஜி. ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது. கவிஞரின் நாட்டுப்பற்றுஇராமலிங்கம் முத்தமிழிலும் ஓவியக்கலையிலும் வல்லவர். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.
என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார். புகழ்பெற்ற மேற்கோள்கள்
நாமக்கல்லாரின் படைப்புகள்
சிறப்புகள்கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை 1949 ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று அரசவைக் கவிஞராகவும், பின்னர் 1956 மற்றும் 1962 ஆண்டுகளில் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு 1971-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது. தமிழ்நாடு அரசு இவர் நாமக்கல்லில் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. அங்கு நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும், சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டத்திற்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கத்தின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் காண்ககாட்சிக்கூடம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வெ. இராமலிங்கம் பிள்ளை |
Portal di Ensiklopedia Dunia