வேள்வி (திரைப்படம்)

வேள்வி
இயக்கம்ஜீன்ஸ்
தயாரிப்புஜீன்ஸ்
கதைஜீன்ஸ்
இசைஜே. கே. செல்வா
நடிப்புவிஸ்வா
ஹாசினி
ஒளிப்பதிவுஎஸ். ஜே. ஸ்டார்
படத்தொகுப்புசுதர்சன்
கலையகம்தி போர்த் டைமன்ஷன் அகாடமி
வெளியீடு10 அக்டோபர் 2008 (2008-10-10)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வேள்வி (Velvi) என்பது 2008 ஆம் ஆண்டய தமிழ் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இந்த படத்தை ஜீன்ஸ் எழுதி தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகங்களான விஸ்வா, ஹாசினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் மதன், ராஜ்பால், சக்தி, காதல் சுகுமார், அகிலன், பாண்டு, ஆர். சேகர், சுந்தரி ஆகியோர் துணை வேடங்களில் நடிதுள்ளனர். இந்த படத்திற்கு ஜே. கே. செல்வா இசை அமைத்துள்ளார். படமானது 10 அக்டோபர் 2008 அன்று வெளியிடப்பட்டது.[1][2]

கதை

போக்கிரி ஆறுமுகம் (ராஜ்பால்) மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையான மோகன் (சக்தி) ஆகியோரை ஓரேமாதிரி கொலை செய்யப்படுதைக் காட்டி படம் தொடங்குகிறது. கொல்லபட்ட இருவருமே இறப்பதற்கு சற்று முன்பு ஒரு பெண்ணைச் சந்தித்ததாகவும் அவள் ஒரு சட்டக் கல்லூரி மாணவி என்றும் காவல் ஆய்வாளர் ரூபேஷ் (அகிலன்) கண்டறிகிறார். ரூபேஷ் ஒரு கல்லூரி பேராசிரியரை ( பாண்டு ) சந்திக்கிறார், சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் குறித்து அவரிடம் கூறினார்.

சந்துரூ (விஸ்வா) முதல் பார்வையிலேயே துளசி (ஹாசினி) மீது காதல் கொள்கிறான். பொறியியல் மாணவரான சந்துரு சட்டக் கல்லூரியில் துளசியைச் சந்திப்பதற்காக தனது வகுப்புகளைத் தவிர்த்துவிட்டு, ஒரு பயிற்சி வழக்கறிஞராக தன்னைக் காட்டிக் கொள்கிறான். அவர்கள் இறுதியில் ஒருவருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்குகின்றனர். இதற்கிடையில், புலிப்பாண்டி (மதன்), ஆறுமுகம், மோகன் ஆகியர் அடங்கிய ஒரு சிறிய குழு உருவாக்கிறது. அவர்கள் கல்லூரியில் மாணவிகளை கிண்டலடித்தல், பகிடிவதை செய்தல், கஞ்சா அடித்தல் போன்ற தகாத செயல்களில் ஈடுபடுகின்றர். ஒரு சமயம் கல்லூரி விதிகளை மதிக்காததற்காக அந்த மூன்று பேருடன் துளசி சண்டையிடுகிறாள். ஒரு நாள், அவர்கள் துளசியை வரம்புமீறி கிண்டல் செய்கின்றனர். இதனால் அவள் அவர்களை காவல்துறையினரைக் கொண்டு கைது செய்விக்கிறாள்.

புலிபாண்டி தான் அடுத்த இலக்கு என்பதை ரூபேஷ் உணர்கிறார். ஆனால் அதற்குள் துளசி அவனையும் கொல்கிறாள். மூன்று நபர்களைக் கொன்றதற்காக துளசியை இறுதியில் ரூபேஷ் கைது செய்கிறார். நீதிமன்றத்தில், துளசி தான் ஒரு கொலைகாரி என்பதை ஒப்புக்கொள்கிறாள். அவர்களைக் கொன்றதற்காக அவள் வருந்தவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, சந்திருவின் பொய்களைப் பற்றி துளசி அறிந்து, அவள் முதலில் கோபம் கொண்டாள். ஆனால் பின்னர், துளசி அவனை மன்னிக்கிறாள். அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தத்தம் செய்யப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய நாள், துளசி மூன்று பேரால் கடத்தப்படுகிறாள். அவர்கள் அவளை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலவீனமான துளசி மறுநாள் திரும்புகிறாள். ஆனால் சந்திரூ கன்னித்தன்மை இழந்த அவளை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிடுகிறான். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவளது பெற்றோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதன்பிறகு துளசி தனது உடலை ஒரு ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்கிறாள்: அவர் அந்த மூன்று ஆண்களையும் கவர்ந்திழுத்து, அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுவதற்காக அவர்களுடன் உடலுறவு கொள்கிறாள். பின்னர் அவர்களை பழிவாங்கும் விதமாக அவர்களைக் கொடூரமாக கொன்று, அவர்களின் மர்மஸ்தானப் பகுதிகளை வெட்டி எடுக்கிறாள். பின்னர் துளசி சந்திருவைக் கடத்திச் சென்று, தான் கன்னித்தன்மையை இழந்ததற்காக அவமானப்படுத்தியதால், அவள் கன்னிப் பையனான சந்திருவை கற்பழிகிறாள். நீதிமன்றத்தில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்காக பெண்கள் சமூகத்தால் மோசமாக நடத்தப்படுவதாக துக்கப்படுகிறாள். நீதிபதி அவளுக்கு மரண தண்டனை விதிக்கின்றனர்.

நடிகர்கள்

தயாரிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த பொறியியலாளர் ஜீன்ஸ், தி போர்த் டைமன்ஷன் அகாடமி என்ற பதாகையின் கீழ் வேள்வி என்ற திரில்லர் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். புதுமுகம் ஹசினி, ஆந்திராவைச் சேர்ந்தவர், ஆனால் அவரது குழந்தை பருவத்திலே சென்னையில் குடியேறிவிட்டார். இவர் பட்டத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பத்தமிட்டார். அதே நேரத்தில் புதுமுகம் விஸ்வா முன்னணி ஆண் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தில் நகைச்சுவைக்காக பாண்டு, காதல் சுகுமார், மதன் பாப், நெல்லை சிவா ஆகியோர் இணக்கபட்டனர். ஜே. கே. செல்வா இசையமைக்க, எஸ். ஜே. ஸ்டார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, சுதர்சன் படத்தொக்குப்பு பணிகளை செய்தார்.[3][4][5][6][7]

இசைப்பதிவு

படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல் இசை போன்றவற்றை இசையமைப்பாளர் ஜே. கே. செல்வா மேற்கொண்டார். 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த இசைப்பதிவில், கோபால்தாசன், ஜீன்ஸ் ஆகியோர் எழுதிய நான்கு பாடல்கள் இடம்பெற்றன.

டெண் பாடல் காலம்
1 "தெறிக்குது தெறிக்குது" 1:10
2 "கண்கள் நான்கும்" 2:02
3 "கல்லூரி தொட்டதில்லை" 1:36
4 "சிறப்பை" 4:41

குறிப்புகள்

  1. "Vaelvi (2008)". spicyonion.com. Archived from the original on 14 ஜனவரி 2021. Retrieved 12 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Jointscene : Tamil Movie Velvi". jointscene.com. Archived from the original on 1 February 2010. Retrieved 12 March 2019.
  3. "Velvi Movie Updates & Photo Gallery". southdreamz.com. 25 February 2008. Retrieved 12 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Hassini exceeds her limit in Velvi". kollywoodtoday.net. 11 October 2008. Retrieved 12 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "I am proud on being a small budget movie Heroine". tamilstar.com. 11 July 2011. Retrieved 12 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. S. R. Ashok Kumar (15 July 2011). "Role model". தி இந்து. Retrieved 12 March 2019.
  7. "New faces in Velvi". jointscene.com. Archived from the original on 6 December 2008. Retrieved 12 March 2019.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya