வே. விஜயசாய் ரெட்டி
வேணும்பாகா விஜயசாய் ரெட்டி (Venumbaka Vijayasai Reddy) (பிறப்பு: ஜூலை 1, 1957) இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். இவர், மாநிலங்களவையில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றக் கட்சித் தலைவர் ஆவார். மேலும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். இவர் தொழில் ரீதியாக பட்டயக் கணக்கறிஞர் ஆவார். 2022 வரை, வர்த்தகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக இருந்தார். தற்போது, போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக உள்ளார். இவர் மாநிலங்களவையின் துணைத் தலைவர்கள் குழுவிற்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டார். மேலும் மாநிலங்களவையின் வணிக ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[3][4] இவர் தற்போது பிரகாசம், நெல்லூர், பாபட்லா மற்றும் நரசராவ்பேட்டை மாவட்டங்களுக்கு கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார். ஓரியண்டல் வணிக வங்கியின் இயக்குனராகப் பணியாற்றியதோடு, பல மாநில அரசு நிறுவனங்களின் குழுவிலும் பணியாற்றினார். அரசியல்ஜூன் 2016 இல், இவர் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 2023 இல், [6] இவர் பத்து தனி நபர் மசோதாக்களை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். [7] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia