இவர் ஜஸ்டிஸ் லீக்கின் நிறுவன உறுப்பினர் ஆவார். இவரின் தோற்றம் முதலில் அக்டோபர் 21, 1941 அன்று வெளியிடப்பட்ட 'ஆல் ஸ்டார் காமிக்சு #8' இல் தோன்றியது.[7] த வொண்டர் வுமன் தலைப்பு டிசி காமிக்ஸால் இதுவரை தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.[8] இவரது தாயகத்தில், தீவு நாடான தெமிசிராவில், இவரது அதிகாரப்பூர்வ தலைப்பு தெமிசிராவின் இளவரசி டயானா ஆகும். தனது தாயகத்திற்கு வெளியே சாதாரண குடிமக்கள் முன்பு தோற்றும் போது சில சமயங்களில் இவள் தன்னை 'டயானா பிரின்சு'[9] என்று அடையாளபடுத்தி கொள்ளவாள்.
இவரின் தோற்றக் கதை (பொற்காலம் முதல் வெண்கல வயது வரை) இவரது தாய் ராணி ஹிப்போலிட்டாவால் களிமண்ணிலிருந்து செதுக்கப்பட்டதாகவும், அமேசான் போன்ற வாழ்க்கை கொடுக்கப்பட்டதாகவும், அமானுஷ்ய சக்திகள் கிரேக்க கடவுள்களால் பரிசாக அளிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. பின்னர் 2011 ஆம் ஆண்டில் டிசி இவரது பின்னணியை மாற்றியமைத்தது, இவர் ஜீயஸ் மற்றும் ஹிப்போலிடாவின் உயிரியல் மகள் என்றும் இவரது தாயார் மற்றும் இவரது அத்தைகள் ஆண்டியோப் மற்றும் மெனலிப்பே ஆகியோரால் கூட்டாக வளர்க்கப்பட்டார் என்று கூறப்பட்டது. அதை தொடர்ந்து 1960 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுருக்கமாக முழுவதுமாக இவர் தனது சக்திகளை இழந்தது பல தசாப்தங்களாக பல சித்தரிப்பில் பாத்திரமாக மாறிவிட்டார். பின்னர் 1980 ஆம் ஆண்டுகளில் கலைஞர் ஜார்ஜ் பெரெஸ் இவருக்கு தடகள தோற்றத்தைக் கொடுத்தார் மற்றும் இவரது அமேசானிய பாரம்பரியத்தை வலியுறுத்தி கதைகளை மாற்று அமைத்தார்.[10][11] இவரிடம் ஒரு ஜோடி அழியாத வளையல்கள், உண்மையை சொல்லும் மாத்திரை கயிறு, ஒரு தலைப்பாகை, மற்றும் பழைய கதைகளில், அமேசான் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பலவிதமான சாதனங்கள் உள்ளிட்ட மந்திரப் பொருட்களின் ஆயுதக் களஞ்சியம் போன்றவற்றை கொண்டுள்ளார்.
இந்த வொண்டர் வுமன் கதாபாத்திரம் இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்டது; கதையின் பாத்திரம் ஆரம்பத்தில் ஆக்ஸிசு படைகளுடன் சண்டையிடுவதாகவும், வண்ணமயமான சூப்பர்வில்லன்களின் வகைப்படுத்தலாகவும் சித்தரிக்கப்பட்டது, இருப்பினும் காலப்போக்கில் இவரது கதைகள் கிரேக்க புராணங்களில் இருந்து பாத்திரங்கள், தெய்வங்கள் மற்றும் அரக்கர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தன. பல கதைகள் வொண்டர் வுமன் தன்னை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதை சித்தரித்தன, இது 1940 ஆம் ஆண்டு வரைகதைகளில் பொதுவாக இருந்தது.[12][13] இவரது அறிமுகத்திலிருந்து பல தசாப்தங்களில் இவளை அழிக்கத் துடிக்கும் எதிரிகளை வென்றுள்ளார். இவருக்கு அரேஸ், சீட்டா, சர்சே, டாக்டர் பாய்சன், ஜிகாண்டா மற்றும் டாக்டர் சைக்கோ போன்ற கிளாசிக் வில்லன்களும், வெரோனிகா கேல் போன்ற சமீபத்திய எதிரிகளும் உள்ளனர். இவர் ஜஸ்டிஸ் சொசைட்டி (1941 முதல்) மற்றும் ஜஸ்டிஸ் லீக் (1960 முதல்) ஆகிய மீநாயகன் அணிகளைக் கொண்ட வரைகதை புத்தகங்களிலும் தொடர்ந்து தோன்றினார்.[14]
இந்த பாத்திரம் பிரபலமான கலாச்சாரத்தில் ஒரு தொன்மையான உருவமாகும், இது பல்வேறு ஊடகங்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது. இவர் ஆல் ஸ்டார் காமிக்சு #8 இல் முதலில் தோன்றியதை நினைவுகூறி ஒவ்வொரு அக்டோபர் 21 ஆம் தேதி வொண்டர் வுமன் நாளாக கொண்டாடப்படுகின்றது.[15] இதை தொடர்ந்து ஜூன் 3, 2017 ஆம் ஆண்டு அன்று இதே பெயரில் திரைப்படம் வெளியானது.[16]
இந்த கதாபாத்திரம் வரைகதையில் இருந்து திரைப்படங்கள், இயங்குபட தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்பட ஆட்டங்கள், பொம்மைகள் மற்றும் வர்த்தக அட்டைகள் உட்பட பல்வேறு தொடர்புடைய டிசி பொருட்களில் இடம் பெற்றுள்ளது. நடிகைகளான சானன் பார்னான், சூசன் ஐசன்பெர்க், மேகி கியூ, லூசி லாலெஸ், கெரி ரஸ்ஸல், ரொசாரியோ டாசன், கோபி ஸ்மல்டர்ஸ், ரேச்சல் கிம்சே மற்றும் ஸ்டானா காடிக் ஆகியோர் இயங்குபடத் தழுவல் கதாபாத்திரத்திற்கு குரலை வழங்கியுள்ளனர். இதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு முதல் நடிகை கால் கடோட் என்பவர் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்ச படமான பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016), வொண்டர் வுமன் (2017), ஜஸ்டிஸ் லீக் (2017) மற்றும் வொண்டர் வுமன் 1984 (2020) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.