ஷாஜஹான் மஸ்ஜித்துஷாஜஹான் மஸ்ஜித்து (Urdu: شاہ جہاں مسجد), தத்தாவின் ஜூம்ஆ மஸ்ஜித்து (Urdu: جامع مسجد ٹھٹہ), எனவும் அழைக்கப்படும் இந்த 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பள்ளிவாசல் பாக்கித்தானின் சிந்து மகாணத்தின் தத்தா நகரில் அமைந்துள்ளது. இப்பள்ளி தெற்கு ஆசியாவில் மிகச் சிறந்த பளிங்கு வேலைப்பாடுகள் கொண்ட பள்ளியாகக் கருதப்படுகிறது,[1][2] மேலும் முகாலாயக் காலக் கடிட்டிங்களில் காணப்படும் அழகு உறுப்பான வடிவியல் செங்கல் வேலைப்பாடுகளுக்கும் பெயர் பெற்றதாக உள்ளது.[3] இப்பள்ளிவாசல் முகலாய பேரசர் ஷாஜகான் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அவர் இப்பள்ளியை இந்நகரத்தாருக்கு நன்றி பகர்வதற்காக கட்டி ஒப்படைத்தார்,[1] மேலும் இப்பள்ளிவாசல் நடு ஆசியா கட்டிடக்கலை தாக்கம் கொண்டுள்ளது - குறிப்பாக இப்பள்ளி வடிவமைப்பிற்குச் சிறிது காலத்திற்கு முந்தைய சமர்கந்து மீதான ஷாஜகானின் படையெடுப்பின் பிரதிபலிப்பாக உள்ளது.[1] அமைவிடம்இப்பள்ளிவாசல் கிழக்கு தத்தாவில் அமைந்துள்ளது - இது சிந்து மாகாணத்தின் தலைநகரம் ஐதராபாத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பாக 16வது மற்றும் 17 நூற்றாண்டில் சிந்து மாகாணத் தலைநகராக இருந்தது. இது உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான மகாலி அடக்கத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இடம் கராச்சியிலிருந்து தோராயமாக நூறு கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ளது. பின்னணி![]() ஷாஜகான் தனது தந்தை ஜகாங்கீருக்கு எதிராக கலகம் செய்த பின்னர், தத்தாவில் அடைக்காலம் நாடினார்.[4] ஷாஜகானின் தத்தாவில் இருந்தபோது பெற்ற சிந்து மக்களின் விருந்தோம்பலில் மகிழ்ந்து, அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக ஒரு பள்ளிவாசலைக் கட்டுமாறு ஆணையிட்டார்.[1][5] இப்பள்ளியின் கட்டுமானத்திற்கு, 1637 ல் இப்பகுதியைத் தாக்கிய அழிவுமிக்க சூறாவளியையும்,[3] அதனால் கிட்டத்தட்ட அழிந்த போன தத்தாவின்[1] துயர் நீக்கும் முயற்சிகளையும் ஒரு பகுதிக் காரணமாகக் கூற முடியும். இக்காலத்தில் நிகழ்ந்த நடு ஆசியா மீதான ஷாஜகானின் படையெடுப்பு இந்த பள்ளிவாசலின் கட்டிடக்கலையில் தாக்கம் செலுத்தியது, ஏனெனில் சமர்கந்து, தற்போதைய உசுபெக்கிசுத்தான் நோக்கிய முகலாயப் பேரரசரின் படையெடுப்பின் போது தைமூரிய தாக்கங்கள் அவரது ஆட்சிப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டன.[1] இதன் கட்டுமானத்தின் போது பேரரசர் இப்பகுதியில் இந்த ஊரில் வசிக்கவில்லை, எனவே அதன் கட்டுமானத்தில் அவர் நேரடியாக ஈடுபட்டார் என்பதை உறுதியாகக் கூற முடியாது, எனினும் இதன் தாராளமான பளிங்கு மற்றும் செங்கல் வேலைகள் முகலாயப் பேரரசின் நிலைவறையிலிருந்து நிதி பெற்றதைக் குறித்துக் காட்டுகின்றன.[3] வரலாறு![]() இப்பள்ளிவாசலில் உள்ள பாரசீக கல்வெட்டுகள் இது 1644 லிருந்து 1647 க்குள்,[3] முகாலயப் பேரரசர் ஷாஜகான் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகின்றன. 1659 ல் கட்டப்பட்ட கிழக்குப் பகுதிக் கட்டிடம்,[6] பேரரசர் ஔரங்கசீப் காலத்தில் கட்டப்பட்டது. இப்பள்ளிவாசலின் "மிஹ்ராப்" முதலில் மக்காவின் திசையில் சரியாக ஒழுங்குபடுதப்படவில்லை. பள்ளியின் திட்டவியலாளர்கள் அருகிலுள்ள நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள சூபி ஞானி, மக்தூம் நூஹ் அவர்களை அணுகி இதை ஓழுங்குபடுத்தித் தருமாறு கோரினார்கள்.[7] ஆனால் வரலாற்றுப் பதிவுகள் பள்ளி கட்டப்பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பின் "மிஹ்ராப்" ஒழுங்கபடுத்தப்பட்டதாகக் கூறுகின்றன.[7] கட்டிடக்கலைஷாஜகான் பள்ளிவாசலின் கட்டிடக்கலை பெருமளவு துருக்கிய மற்றும் பாரசீகப் பாணிகளின் தாக்கம் கொண்டுள்ளது.[8] இப்பள்ளிவாசல் விரிவான சங்கல் வேலைப்பாடு மற்றும் நீலப் பளிங்குப் பயன்பாட்டினைக் கொண்டுள்ளது, இவையிரண்டும் நடு ஆசியாவின் தைமூரிய கட்டிடக்கலை பாணி தாக்கத்தினால் விழைந்தவை. [3][1] - ஏனெனில் சிந்து மகாணம் 1592 இல் முகலாயப் பேரரசுடன் இணைக்கப்படுவதற்கு முன்பு இம்மாகணத்தின் ஆட்சியாளர்கள் தைமூரிய அரசின் கீழ் இருந்தனர்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia