ஜுபிடர் பிக்சர்ஸ்
ஜுபிடர் பிக்சர்ஸ் (Jupiter Pictures) என்பது 1934 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் எம். சோமசுந்தரம் ("ஜுபிடர் சோமு" என்று பிரபலமாக அறியப்படுகிறார்) மற்றும் எஸ். கே. மொகிதீன் ஆகியோரால் நிறுவப்பட்ட ஓர் இந்திய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தமிழில் 36 படங்கள், தெலுங்கில் 5, கன்னடத்திலும், இந்தியிலும் தலா 2 படங்கள், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு கூட்டு வெளியீடு என 46 படங்களை வெளியிட்ட ஒரு ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருந்தது. 40 களின் பிற்பகுதியிலும் 50 களின் முற்பகுதியிலும், இவர்கள் கோயம்புத்தூரில் இருந்த சென்ட்ரல் ஸ்டுடியோவில் இயங்கினர். ஸ்டுடியோ மூடப்பட்டதைத் தொடர்ந்து, இவர்கள் சென்னைக்கு இடம்பெயர்ந்தனர். அடையாறில் உள்ள நெப்டியூன் ஸ்டுடியோவை வாங்கினர். அது பின்னர் சத்தியா ஸ்டுடியோவாக மாறியது. சென்னைக்கு இடம்பெயர்ந்த பிறகு ஜூபிடர் பிக்சர்ஸ் அலுவலகமானது மயிலாப்பூரில் இருந்த "மங்கள விலாஸ்" எனப்பட்ட பழைய அரண்மனை கட்டிடத்தை குத்தகை எடுத்து அதில் இயங்கி வந்தது. ஏ. எஸ். ஏ. சாமி தனது பெரும்பாலான படங்களை ஜூபிடர் பிக்சர்சுக்காக இயக்கினார். 50 மற்றும் 60 களில் சென்னையில், ஜூபிடர் பல வெற்றிப் படங்களை தயாரித்தது. அவற்றில் மனோகரா (எல். வி. பிரசாத் 1957 இல் இயக்கியது), கற்புக்கரசி (எஸ். ஏ. சாமி 1957 இல் இயக்கியது), தங்கப்பதுமை (1965 இல் எஸ். ஏ. சாமி இயக்கியது), எல்லோரும் இந்நாட்டு மன்னர் "(1960, தாதிநேனி பிரகாச ராவ்), "அரசிளங்குமரி" (1961, சாமி) போன்றவை குறிப்பிடதக்கவை. இந்த தயாரிப்பு நிறுவனம் பிரபலமாவதற்கு முன்பு பிற தயாரிப்பாளர்களுடன் இணைந்து சில படங்களை தயாரித்தது. பிற்காலத்தில் இந்த நிறுவனத்தை எஸ். கே. அபிபுல்லாவால் (எஸ். கே. மொகிதீனின் மகன்) நிருவகிக்கப்பட்டது.[1] ம.கோ.இரா நடித்த அரசிளங்குமரி, சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதுமை உள்ளிட்ட நான்கு படங்களை ஜுபிடர் பிக்சர்ஸ் ஒரே நேரத்தில் தயாரித்தது. இந்தப் படங்கள் பெரியதாக வெற்றியை ஈட்டாததால் ஜுபிடருக்கு சொந்தமான நெப்டியூன் ஸ்டுடியோ விற்பனைக்கு வந்தது. அதை ம.கோ.இரா வாங்கி சத்தியா ஸ்டுடியோஸ் என்று பெயர் மாற்றினார்.[2] திரைப்படவியல்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia