கனகதாசர்
கனகதாசர் பொ.ஊ. 15ஆம் நூற்றாண்டைச் (1509–1609) சேர்ந்த வைணவ பக்தர் மற்றும் இசைக் கலையில் சாதனை படைத்தவர். கர்நாடக இசைக் கலையில் சாதனை படைத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர். கன்னட பக்தி இலக்கியத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கியவர். உடுப்பி கிருஷ்ணர் கோயில் கிருஷ்ணர் மேற்கு நோக்கி காட்சி தர இவர் காரணம் என்பதாக வரலாறு.[1] கனகதாசர் 240 கர்நாடக இசைப் பாடல்கள் இயற்றியுள்ளார்.[2] இவரது பாடல்கள் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 100 பாடல்கள் கன்னடத்திலும்[3], 60 பாடல்கள் ஆங்கிலத்திலும் பிரபலமான புத்தகங்களில் வெளியாகியுள்ளன.[4] வாழ்க்கைக் குறிப்புபதினாறாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பாடா என்னும் கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை படைத் தளபதியாகப் பணியாற்றியவர். குழந்தைச் செல்வம் வேண்டி வெங்கடேசப் பெருமானுக்கு சிறந்த வழிபாடுகள் செய்தவர். அதன் பயனாகப் பிறந்த குழந்தைக்கு திம்மப்பா என்று பெயர் வைத்தார். திம்மப்பா சிறந்த தளபதி ஆனார். ஒரு சமயம் திம்மப்பா போரில் கடுமையாகத் தாக்கப்பட்டு நினைவு இழந்தபோது கிடைத்த வெங்கடேசப் பெருமாளின் தரிசனத்தால் பக்தி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார். தன் செல்வம், போர் வாழ்க்கை அனைத்தையும் ஒதுக்கினார். இறைப் பணியிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தனக்குக் கிடைத்த பொருளைக் கொண்டு சொந்த ஊரான பாடாவுக்கு அருகில் கேசவனுக்கு ஒரு கோயில் கட்டினார். இந்தக் காலகட்டத்தில் தான் திம்மப்பாவின் பெயர் கனகப்பாவாக மாறியது. பக்தி வெளிப்பாடுதாசகூடம் என்னும் அமைப்பு கன்னட பக்தி இலக்கியத்தைப் பொறுத்த வரை மிகச் சிறப்பான இடம் வகிக்கிறது. அதில் வியாசராயனின் சீடனாக கனகப்பா தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தாசகூடம் அமைப்பு அவரை கனகதாசராக்கியது. தனது மாணவர்களில் மிகச் சிறந்தவர் கனகதாசரே என வியாசராயனே குறிப்பிட்டு உள்ளார். ஒரு மனிதனின் உயர்வுக்குச் சாதியும், அவனது மத நம்பிக்கைகளும் காரணமாக முடியாது என்பது அவருடைய கொள்கையாகும். இதை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் பாடல்கள் அமைந்தன. படைப்புகள்மோகன தரங்கிணி, நள சரித்ரே, ராமதான்ய சரித்ரே ஆகியவை அவருடைய படைப்புகளில் சிலவாகும்.
அங்கீகாரங்கள்இவரைப் போற்றும் விதமாக கர்நாடகாவில் கார்த்திகை மாதம் 18ஆம் நாள் கனகதாசர் ஜெயந்தி நாளாக போற்றப்படுகிறது. இந்த நாளை மாநில விடுமுறை நாளாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. திரைப்படம்
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia