2012 கோடைக்கால ஒலிம்பிக்கில் ஒவ்வொரு நாடும் பெற்ற பதக்கங்களைக் காட்டும் உலக வரைபடம். குறியீடு: தங்கம் - ஒரு தங்கப் பதக்கமேனும் பெற்ற நாடுகள். வெள்ளி - ஒரு வெள்ளிப் பதக்கமேனும் பெற்ற நாடுகள். வெண்கலம் - ஒரு வெண்கலப் பதக்கமேனும் பெற்ற நாடுகள். நீலம் - எந்தப் பதக்கமும் பெறாத நாடுகள். சிவப்பு 2012 கோடைக்கால ஒலிம்பிக்கில் பங்கேற்காத நாடுகள்.
பெண்கள் துப்பாக்கி்ச் சுடுதலில் பதக்கம் வென்றோர், இடதிலிருந்து வலதாக: இசுலோவாக்கியாவிருந்து சுசானா இசுடெபெக்கோவா (வெள்ளி), இத்தாலியின் ஜெஸ்ஸிகா ரோசி (தங்கம்), மற்றும் பிரான்சின் டெல்பின் ரியா (வெண்கலம்)பெண்கள் டென்னிசில் பதக்கம் பெற்ற விக்டோரியா அசரென்கா (வெண்கலம்), செரீனா வில்லியம்ஸ் (தங்கம்) மற்றும் மரியா ஷரபோவா (வெள்ளி)
இந்தப் பட்டியலில் தரப்பட்டுள்ள தரவரிசை பன்னாட்டு ஒலிம்பிக் குழு (IOC)வின் மரபுமுறைகளுக்கு ஒப்பவும் அந்த அமைப்பால் தரப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இயல்பிருப்பாக ஒரு நாட்டின் (இங்கு நாடு அந்நாட்டு தேசிய ஒலிம்பிக் குழுவைக் குறிக்கிறது) விளையாட்டாளர்கள் வென்ற தங்கப் பதக்கங்களைக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வென்ற வெள்ளிப் பதக்கங்களும் பின்னர் வெண்கலப் பதக்கங்களும் கருத்துள் கொள்ளப்படுகின்றன. இரு நாடுகளும் ஒரே எண்ணிக்கையைப் பெற்றவிடத்து அவர்களுக்கு ஒரே தரவரிசை வழங்கப்பட்டு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நாட்டுக் குறியீடுகளின்படி அகரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆண்களுக்கான 200 மீட்டர் 'ப்ரீஸ்டைல்' நீச்சல் போட்டியில் இரண்டு பேருக்கு வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டது. சமநிலையில் இரண்டுபேரின் திறமை வெளிப்பட்டதால் நடுவர்குழு இங்ஙனம் தீர்மானித்தது; வெண்கலப்பதக்கம் வழங்கப்படவில்லை.[9]
குறிப்பு
போட்டி நடத்தும் நாடு ஐக்கிய இராச்சியம்(பிரித்தானியா) ஒலிம்பிக்கில் முதன் முதல் தங்கம் பெற்ற நாடு ஒலிம்பிக்கில் முதன் முதல் பதக்கம் பெற்ற நாடுகள்
ஆகத்து 13, 2012 அன்று பன்னாட்டு ஒலிம்பிக் அவை பெண்கள் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற பெலருசு நாட்டு விளையாளர் நாட்சியா ஓஸ்டப்சுக்கை ஊக்க மருந்து பயன்படுத்தியதாக பதக்கத்தைத் திரும்பப் பெற்றது. இதன் விளைவாக நியூசிலாந்து வெள்ளிப் பதக்கத்திற்கு மாறாக தங்கப் பதக்கமும் உருசியா வெண்கலப்பதக்கத்திற்கு மாறாக வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டன. நான்காவதாக வந்த சீனாவின் கோங் லிஜியோவிற்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.[10]