2013 மரக்காணம் வன்முறை2013 மரக்காணம் வன்முறை (2013 Marakkanam violence) என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த வன்முறையைக் குறிக்கிறது. இது மரக்காணம் அருகே உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு இடையே நடந்த மோதலாகும். இதில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.[1][1] இது தொடர்பான வழக்கில் திண்டிவனம் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து முடிந்து குற்றம்சாட்ட பட்ட தலித் 6 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. [2] மேலும், இக்கலவரம் தொடர்பாக சுமார் 200 பா.ம.க-வினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். விசாரணை அடிப்படையில் சுமார் 166 பேர் விடுவிக்கப்பட்டு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், மாணிக்கம், கலையரசன், குமரன் உள்ளிட்ட 34 பேரை போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த கலவரம் தொடர்பான வழக்கு, திண்டிவனம் நீதிமன்றத்தில் 2-வது கூடுதல் அமர்வு முன்பு 8 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. அந்த 34 பேரில் இருந்து 14 பேர் விடுவிக்கப்பட்டு, 20 நபர்கள் மீது மட்டும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்து (22.04.2022) அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மரக்காணம் கலவரம் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பா.ம.க-வைச் சேர்ந்த 20 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சுதா தீர்ப்பளித்தார்[2]. இதனால் மரக்காணம் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பா.ம.கவினர் அனைவருமே விடுதலை செய்யப்பட்டனர். மரக்காணத்தில் 2002 ஆம் ஆண்டு மோதல்கள் நடந்திருக்கின்றன. பின்னணிஆண்டுதோறும் மாமல்லபுரத்தில், சித்திரை மாதம், பௌர்ணமி தினத்தன்று வன்னியர் சங்கம் சார்பில் 'முழுநிலவு சித்திரை பெருவிழா' நடப்பது வழக்கம். இந்த நிலையில் 2012 இல் நடைபெற்ற சித்திரைப் பெருவிழாவில், பாமக தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் பேச்சு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரானதாக பலரால் கண்டிக்கப்பட்டது.[3][4][5] அதே ஆண்டு தருமபுரி வன்முறைகள் வன்னியருக்கும் , தலித்துகளுக்கும் இடையில் நடந்தன. இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையில் கசப்புணர்வு நிலவியது. இதனால், 2013 இல் 'வன்னியர் சங்கம் சார்பாக மாமல்லபுரத்தில் சித்திரைப் பெருவிழா நடத்தக் கூடாது' என ஒரு சிலரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் 2013 ஏப்ரல் 25 அன்று வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியும் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு கொண்டாட்டத்தை நடத்தின. இந்த விழாவை ஒட்டி மரக்காணம் சாதிக் கலவரம் நடந்தது.[6] இதன் பிறகு நடந்த மோதலையடுத்து இரண்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆறு தலித்துகளால் கொல்லப்பட்டனர்.[7] [3].[8] வன்முறைகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற ‘சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா’வையொட்டி விழாவுக்கு வந்தவர்களில் ஒரு குழுவினர் 2013 ஏப்ரல் 25 அன்று கிழக்குக் கடற்கரைச் சாலை மரக்காணம் (தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு) கட்டையன் தெரு, இடை கழியூர், கூனிமேடு ஆகிய இடங்களில் தலித் மக்களைத் தாக்கியும் அவர்களின் குடியிருப்புகளைக் கொளுத்தினர். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் வெளியூர்காரர்கள் என்றாலும் அவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தந்து உதவியிருப்பவர்கள் உள்ளூர்க்காரர்களே என்ற குற்றச்சாட்டை மக்கள் சிவில் உரிமைக் கழக உண்மை அறியும் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. ஏனென்றால் இந்த வன்முறையில் தலித் வீடுகள் தவிர பிற சாதியினர் வீடுகள் எதுவும் தாக்கப்படவில்லை என தன் அறிக்கையில் குழு தெரிவித்தது.[9] இதன் இடையே மாநாடு முடிந்து திரும்பிய பாமக தொண்டற்களை அப்பகுதி தலித்கள் ஒன்று சேர்ந்து கற்களாலும் கட்டைகளாலும் அடிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியது. [4] பின்விளைவுகள்இந்த நிகழ்வு தொடர்பாக ஏப்ரல் 30 அன்று விழுப்புரத்தில் பாமக நிறுவனர் ச. இராமதாசு மற்றும் கட்சித் தலைவர் கோ. க. மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.[10] இந்த கைதின் காரணமாக, தமிழகத்தில் பா.ம.க, வன்முறைகளில் ஈடுபட்டது.[11] இந்த வன்முறையின் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம், போன்ற தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஏறத்தாழ 1,601 பேருந்துகள் இயக்கப்படவில்லை.[12] இந்த வன்முறையானது மே 11 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் இருந்து ச. இராமதாஸ் விடுதலைச் செய்யப்படும் வரை நடந்தது.[13] இந்த வன்முறையால் மொத்தம் 853 பேருந்துகள் சேதமடைந்தது மட்டுமல்லாது 165 மரங்களும் வெட்டி வீழ்த்தப்பட்டன . இந்த வன்முறை காரணமாக பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்வதாக தமிழக அரசு அச்சுறுத்தியுள்ளது.[14] இந்த வன்முறைகள் பாமக நிறுவனர் இராமதாஸ் கைது செய்யப்பட்டதால் நடத்தப்பட்டன.[7] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia