2015 அமைதிக்கான நோபல் பரிசு
2015ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு (2015 Nobel Peace Prize) துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு அமைப்பிற்கு[1] "2011ஆம் ஆண்டின் மல்லிகைப் புரட்சியை அடுத்து தூனிசியாவில் பன்மைத்துவ சனநாயகத்தைக் கட்டியெழுப்புவதில் இதன் தீர்க்கமான பங்களிப்பிற்காக” வழங்கப்பட்டது.[2] தேசிய கலந்துரையாடல் நாற்கூட்டு 2013-ல் உருவாக்கப்பட்டது.[2] இது தூனிசிய குடிமை சமூகத்தில் நான்கு அமைப்புகளை உள்ளடக்கியது. இவை:
அமைதிக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் "நாடுகளுக்கிடையே சகோதரத்துவத்திற்காக, நிலையான படைகளை ஒழித்தல் அல்லது குறைத்தல் மற்றும் அமைதி மாநாடுகளை நடத்துதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றிற்காக அல்லது அதற்கான சிறந்த பணிகளைச் செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.[3] தூனிசிய பாடகர்/பாடலாசிரியர் எமல் மத்லோதி விருது வழங்கும் விழாவின் போது கெல்ம்தி கோரா பாடினார். இந்த விழாவானது திசம்பர் 11, 2015 அன்று நார்வே ஒசுலோ நகரில் உள்ள நகர அரங்கில் நடைபெற்றது. பரிந்துரைகள்நோர்வே நோபல் குழு, அமைதிப் பரிசுக்காக 273 பரிந்துரைகளைப் பெற்றது. இவற்றில் 68 பரிந்துரைகள் நிறுவனங்களுக்காகவும், 205 விண்ணப்பங்கள் தனி நபர்களின் பங்களிப்பிற்காகவும் இருந்தன. 2014-ல் 278 பரிந்துரைகள் பெறப்பட்டன. இதற்கு அடுத்ததாக 2015-ல் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பரிந்துரைகள் பெறப்பட்டது இம்முறையாகும்.[4] யாருக்கு விருது வழங்கப்படும் என்று பல செய்தி ஊடகங்கள் ஊகித்தன. இந்த விருது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஐரோப்பிய புலம்பெயர்ந்தோர் நெருக்கடி ஜெர்மனிக்கு ஏராளமான அகதிகள் மற்றும் குடியேறியவர்களை அனுமதித்ததற்காகவும், ஜெர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கல், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்காக அமெரிக்க மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர்கள் ஜான் கெர்ரி மற்றும் முகமது ஜாவத் ஜரீப், அமெரிக்காவிற்கு உதவி செய்த திருத்தந்தை பிரான்சிசு ஆகியோர் ஊடக பட்டியலில் இடம் பிடித்தவர்கள். கியூபா தாவ், கொலம்பிய குடியரசுத் தலைவர் குவான் மானுவல் சந்தோசு மற்றும் கொலம்பிய மோதலில் சமாதான முன்னெடுப்புகளுக்காக கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படை, கெரில்லா தலைவர் திம்மோலியான் ஜிமென்சு மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் காங்கோ மகளிர் மருத்துவ நிபுணர் டெனிசு முக்வேகி பரிந்துரைக்கப்பட்டவர்களாவர்.[5][5][6] குழுஅமைதிக்கான நோபல் பரிசு நோர்வே நோபல் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. 2015 விருது தேர்வுக்குழு உறுப்பினர்கள்:[7]
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia