2016-2017 இந்திய பஞ்சாபில் குறிவைத்து நடத்தப்பட்ட கொலைகள்
2016-2017களில் இந்திய பஞ்சாபில் குறிவைத்து நடத்தப்பட்ட கொலைகள் (2016–17 targeted killings in Punjab, India), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் விடுதலைப் படையினரால் இந்து மற்றும் கிறித்தவ தலைவர்கள் குறி வைத்துக் கொல்லப்பட்டனர்.[1] காலிஸ்தான் விடுதலைப் படையினரால் குறி வைத்து கொல்லப்பட வேண்டியர்களின் பட்டியலில் இருந்தவர்களில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் 1 ஆர் எஸ் எஸ் தலைவர், 2 சிவ சேனா தலைவர்கள், 1 இந்து சங்கர்ஷ் சேனா தலைவர், 1 கிறித்துவ மத போதகர், 2 தேரா சச்சா சௌதா, 1 நாம்தாரி தலைவர் மற்றும் 1 சிறி இந்து தக்த் தலைவர் அடங்குவர். இப்படுகொலைக்களுக்கு காரணமானவ காலிஸ்தான் விடுதலைப் படையினர் கைது செய்யப்பட்டனர். இந்திய பஞ்சாப் மாநிலத்தில் மதக் கலவரங்களைத் தூண்டுவதற்காகவும் மற்றும் தீவிரவாதச் செயல்களுக்கு நிதியளித்து உதவியதற்காக பாகிஸ்தான் உளவு நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் பொறுபேற்க வேண்டும் இந்தியா கூறியது. மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia