இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும்.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.
இந்தியாவில் 2016 ஆம் ஆண்டிற்கான வடகிழக்குப் பருவமழைக் காலம் அக்டோபர் 30 அன்று தொடங்கியது.
இம்முறை சற்று தாமதமாக ஆரம்பித்தாலும், இயல்பான மழையளவு இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நடுவம் அறிவித்தது.[1][2] எனினும் நவம்பர் 30 வரை குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்யவில்லை.[3]
மழையளவில் பற்றாக்குறை
வங்காள விரிகுடாக் கடலில் உருவான நாடா எனும் புயலின் காரணமாக பெய்த மழையால், தமிழ்நாடு மாநில மழையளவுப் பற்றாக்குறை 71% என்பதிலிருந்து 68% என்றானது.[4]
அடுத்து உருவான வர்தா புயலினால் ஏற்பட்ட மழைப்பொழிவினை அடுத்து, தமிழ்நாடு மாநில மழையளவுப் பற்றாக்குறை 61% என்றானது (டிசம்பர் 13 அன்று காலை 8.30 மணி நிலவரப்படி)[5].
உருவான புயல்கள்
இந்தப் பருவமழைக் காலத்தில், இரண்டு புயல் சின்னங்கள் வங்காள விரிகுடாக் கடலில் உருவாகின.
நாடா புயல்
வங்காள விரிகுடா கடலில் காணப்பட்ட நாடா புயல் சின்னம் (30 நவம்பர் 2016, இந்திய நேரம் இரவு 8.30 மணியளவில் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் ஒளிப்படம்)
வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வுநிலை, கரையைக் கடக்கும்போது கனமழை பெய்யும் என சென்னை வட்டார புயல் எச்சரிக்கை நடுவம் அறிவித்தது.[6][7] இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 1, டிசம்பர் 2 ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசியப் பேரிடர் கவனிப்புப் படைகள் அனுப்பப்பட்டன.
மாநிலத்திற்கு நல்ல மழைப்பொழிவினை தரும் என எதிர்பார்க்கப்பட்ட நாடா புயல், குறிப்பிடத்தக்களவில் மழையைக் கொண்டுவரவில்லை.
↑"Districtwise Rainfall Status". Regional Meteorological Centre, Chennai. 13 டிசம்பர் 2016. Retrieved 13 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)