2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை
2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (2021-23 ICC World Test Championship) என்பது ஐசிசி நடத்திய உலகத் தேர்வு துடுப்பாட்ட வகையின் இரண்டாம் பதிப்பு ஆகும்.[1][2][3] இப்போட்டிகள் 2021 ஆகத்து 4 இல் தொடங்கியது,[4] இறுதிப்போட்டி 2023 சூன் 7–11 நாட்களில் இலண்டன், தி ஓவல் அரங்கில் ஆத்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையே நடைபெற்றது.[5] நியூசிலாந்து நடப்பு வாகையாளர் ஆகும்.[6][7] 2021-23 இன் இறுதிப்போட்டி சூன் 2023 இல் இலண்டனில் நடத்தப்படும் என ஐசிசி 2022 செப்டம்பரில் அறிவித்தது.[8][9] இறுதிப்போட்டியில் ஆத்திரேலியா 209 ஓட்டங்களால் இந்தியாவை வென்று, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே அணி என்ற சாதனையைப் பெற்றது.[10] போட்டி முறை69 போட்டிகள் கொண்ட இத்தொடரில், அனைத்து அணிகளும் 6 தேர்வு துடுப்பாட்ட தொடர்களை (Series) விளையாடும். 3 தொடர்களைத் தம் நாட்டிலும், பிற 3 தொடர்களை வெளிநாடுகளிலும் விளையாடுகின்றது. புள்ளிகள் வழங்கும் முறைஒவ்வொரு போட்டியிலும், அணிகள் 12 புள்ளிகளுக்காக போட்டியிடும் . ஒரு போட்டியை வெல்லும் அணிக்கு 12 புள்ளிகள் வழங்கப்படும். ஆட்டம் சமனாகும் (Tie) பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகள் வழங்கப்படும். ஆட்டம் வெற்றி-தோல்வியின்றி முடியும் பட்சத்தில், இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்படும். தோல்வியைத் தழுவும் அணிக்கு புள்ளிகள் கிடையாது. புள்ளிப்பட்டியலில் அணிகள், போட்டியிட்ட புள்ளிகளில், பெற்ற புள்ளிகளின் சதவீதத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும்.[11]
அணிகள்தொடரில் பங்குபெறும் ஐசிசியின் 9 முழுநிலை உறுப்பினர்கள்[12]: அட்டவணைபின்வரும் அட்டவணையில் ஒவ்வொரு அணியும் மோதவுள்ள மொத்த போட்டிகளும் அவை மோதாத அணிகளின் பட்டியலும் உள்ளது.
குழுநிலைப் போட்டிகள்புள்ளிப்பட்டியல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia