2023 அசாரா விரைவுவண்டி தடம் புரளல்அசாரா விரைவுவண்டி தடம் புரள் விபத்து என்பது 2023 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் (08:18 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் மற்றும் மு.ப 4:18 கிழக்கு தரநிலை நேரம் ), கராச்சியிலிருந்து பாக்கித்தானின் இராவல்பிண்டிக்கு பயணித்த அசாரா விரைவுவண்டியின் பத்து பெட்டிகள் சிந்துவில் உள்ள நவாப்ஷா அருகே தடம் புரண்ட விபத்தாகும். குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[1][2] பின்னணிபிரித்தானிய காலனித்துவ காலத்திலிருந்து புதுப்பிக்கப்படாத காலாவதியான அமைப்புகளின் காரணமாக,[3] பாக்கித்தானின் இரயில் போக்குவரத்துத் துறையில் விபத்துக்கள் மற்றும் தடம் புரண்டது அசாதாரணமானது அல்ல.[4] சைகை விளக்கு அமைப்புகள் மற்றும் வயதான தடங்களை புறக்கணித்ததற்காக பாக்கித்தானிய அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.[5] 2022 வெள்ளத்திற்குப் பிறகு தண்டவாளங்கள் மோசமான நிலையில் இருப்பதாக பாக்கித்தான் குடிமக்கள் தெரிவித்தனர்.[6] ஒரு நாள் முன்னதாக, அல்லாமா இக்பால் விரைவுவண்டி பாடிதான் அருகே தடம் புரண்டது.[7] 2021 கோட்கி இரயில் விபத்தும் இதே மாகாணத்தில் நடந்தது.[8] உள்ளூர் அறிக்கைகளின்படி, 2013 முதல் 2019 வரை, இரயில் விபத்துகளில் 150 பேர் இறந்துள்ளனர்.[4] சம்பவம்பாக்கித்தான் திட்ட நேரம் 13:18 (08:18 ஒ. அ. நே ), அசாரா விரைவுவண்டியின் பத்து பெட்டிகள் கராச்சியில் இருந்து சர்கோதா செல்லும் வழியில் சதாத்பூர் மற்றும் நவாப்ஷா இடையே சர்கோதா ரயில் நிலையம் அருகே தடம் புரண்டன. ரயிலில் சுமார் 1,000 பயணிகள் இருந்தனர். காயமடைந்தவர்கள் நவாப்சாவில் உள்ள மக்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றனர். பழுதுபார்க்கும் குழுக்கள் வந்தவுடன் முதன்மைத் தண்டவாளத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.[8] புலனாய்வாளர்கள் காரணத்தை தீர்மானிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார்கள். பின்விளைவுமீட்பு 1122, பாக்கித்தான் இரயில்வே, பாக்கித்தான் இராணுவம், ரேஞ்சர்கள் மற்றும் காவல்துறையின்ர் விபத்து நடந்த இடத்தில் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.[9] பெனாசிராபாத் காவல்துறை துணை ஆய்வாளர் ஜெனரல் யூனிஸ் சாண்டியோ கூறுகையில், பழுதடைந்த பத்து பெட்டிகளில் ஒன்பது பெட்டிகளில் பயணம் செய்து இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விசாரணைவிபத்து நடந்த பாதையில் எந்த தவறும் இல்லை என்று இரயில்வே அமைச்சர் கவாஜா சாத் ரபீக் கூறியதுடன், விசாரணைக்கும் உத்தரவிட்டார்.[10] 8 ஆகத்து 2023 அன்று ஆறு பேர் கொண்ட குழு சமர்ப்பித்த முதற்கட்ட அறிக்கையில், விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களை இணைக்கும் உலோகத்தட்டுகள் காணவில்லை என்றும், தண்டவாளத்தின் ஒரு பகுதி மரத்தால் மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.[11] இரயில் எந்திரத்தில் இருந்த சக்கரங்கள் சேதமடைந்துள்ளதாகவும், நாசவேலையை தவிர்க்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து 3 அதிகாரிகள் உட்பட 6 ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.[12] 9 ஆகத்து 2023 அன்று, உலோகத்தகடுகள் காணவில்லை என்றும், பழுதுபார்க்க மரம் பயன்படுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்ட முந்தைய அறிக்கைகளை ரஃபீக் மறுத்தார். விபத்துக்கு முக்கிய காரணமாயக, இயங்கத் தடுமாறும் இரண்டு சக்கரங்கள் மற்றும் தண்டவாளத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது தான் என்பது தெரிவிக்கப்பட்டது.[13] எதிர்வினைகள்இது குறித்து பிரதமர் செபாஷ் ஷெரீப் ட்விட்டரின் தெரிவித்ததாவது: இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளேன். உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தனது டுவிட்டர் பக்கத்தில், “இறந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிறந்த சுகாதார வசதிகள் வழங்கப்பட வேண்டும்." என்று கூறியுள்ளார்.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia