2024 வயநாட்டு நிலச்சரிவுகள்
2024 வயநாடு நிலச்சரிவுகள் (2024 Wayanad landslides) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் மலைப்பாங்கான இடங்களில் ஏற்பட்ட பல நிலச்சரிவுகளைக் குறிக்கும்.[1] 2024 சூலை 30 அன்று நிகழ்ந்த இந்த நிலச்சரிவுகளின் விளைவாகக் குறைந்தது 318 பேர் இறந்தனர். 200 பேர் காயமடைந்தனர். 220 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.[2][3] கேரளாவின் வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான நிலச்சரிவு இதுவாகும்.[4] பின்னணிமேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மலைப்பாங்கான மாவட்டம் வயநாடு ஆகும். இப்பகுதி மழைக் காலங்களில் நிலச்சரிவுகளுக்கு ஆளாகிறது.[2] சூலை மாதத்தில் சில நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்ததால், புஞ்சிரிமட்டம், அட்டமலை, முண்டக்காய் ஆகிய பகுதிகளில் வசித்த மக்கள், 29 சூலை திங்கள்கிழமை நிவாரண முகாம்களுக்கு உள்ளாட்சி நிர்வாகத்தால் மாற்றப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தும், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியாகக் குறிக்கப்படாததால், சூரமலைப் பகுதியில் வசிக்கும் பலர் வீடுகளில் தங்கியுள்ளனர்.[5] நிகழ்வுமுதல் நிலச்சரிவு முண்டக்கைக் கிராமத்தில் சூலை 30 அன்று அதிகாலை 01:00 (இந்திய நேரப்படி) மணிக்குத் தாக்கியது. இதைத் தொடர்ந்து 04:00 மணிக்கு வடக்கே அருகிலுள்ள சூரல்மாலாவில் இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது. குடியிருப்புகளையும் சூரமலையையும் இணைக்கும் பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து முண்டக்காய் மற்றும் அட்டமலையில் வசிக்கும் ஏறத்தாழ 400 குடும்பங்கள் சிக்கித் தவித்தனர்.[4] ஒட்டுமொத்தமாக, முண்டக்கை, அட்டமலா, சூரல்மாலா மற்றும் குன்கோம் ஆகிய நான்கு கிராமங்கள் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டன.[2] இந்த தொடர் நிலச்சரிவுகளால் குறைந்தது 224[2] இறப்புகள் ஏற்பட்டன. 191க்கும்[4] மேற்பட்டவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் இப்பகுதியில் அமைந்துள்ள தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்ட போது இவர்களது தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்துள்ளனர்.[2] சாளியாற்றிலிருந்து மீட்பு படையினர் 16 உடல்களை கண்டெடுத்தனர்.[2] இறப்புகள் மற்றும் காணோதோர்3 ஆகஸ்டு 2024 வரை நிலச்சரிவில் 358 பேர் இறந்தனர் மற்றும் 200 பேர் காணவில்லை எனச்செய்திகள் வெளியாகியுள்ளது.[6][7] பின்விளைவுவலுவான ஆற்று நீரோட்டம் மற்றும் கனமழையால் தடைப்பட்டுள்ள இப்பகுதிக்கு மாநில மற்றும் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்தியத் தரைப்படை 200க்கும் மேற்பட்ட வீரர்களை அப்பகுதிக்கு அனுப்பி, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. உள்ளூர் மருத்துவமனைகள் 120க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்தன. 3,000க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பேரிடர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.[2][4] 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.[8][2] நிவாரணம்இறந்தவர்களின் உறவினர்களுக்குத் தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.[9] மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசி, ஐக்கிய ஜனநாயக முன்னணித் தொழிலாளர்களுக்கு உதவி செய்யுமாறு வலியுறுத்தினார்.[10] நிலச்சரிவு குறித்து கேரள முதல்வர் விஜயனுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக அரசு நிவாரணப் பணிகளுக்காக ₹5 கோடி வழங்கியும் மருத்துவம் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பியது.[11] மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia