வயநாடு (வயல்நாடு) மாவட்டம் (Wayanad district) இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு இது 1980-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் திகதி கேரளாவின் 12-ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இப்பகுதி முற்காலத்தில் மாயாசேத்திரம் என அழைக்கப்பட்டதாக பழைய குறிப்புகள் தெரிவிக்கின்றன. இது மருவி வயநாடு ஆனதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால், உள்ளூர் மக்கள் நடுவில் நிலவும் கருத்துக்களின்படி வயல்கள் நிறைந்த நாடு என்னும் பொருளிலேயே வயநாடு என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்பகுதியில் பல பழங்குடியினர் வாழ்ந்துவருகின்றனர். இது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 700 தொடக்கம் 2100 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.[9]
வயநாடு அம்பலவயல் பகுதியில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை அமைந்துள்ளது. இங்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் பூப்பொலி என்ற பெயரில் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த மலர் கண்காட்சிக்காக 12 ஏக்கர் நிலம் தயார்படுத்தப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு சனவரி 1 முதல் 18 வரையில் நடைபெறும் மலர் கண்காட்சியில் 1,640 வகை ரோஜாக்கள், 1,200 வகை டேலியா மலர்கள், 15 வகை கிளாடியோஸ் உள்ளிட்ட பல்வேறு பூக்கள் பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்தது.[11]
30 சூலை 2024 அன்று இரவில் கொட்டிய கனமழையால் மாவட்டத்தின் முண்டக்கை, சூரமலை, மேப்பாடி மற்றும் அட்டமலை கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 5 ஆகஸ்டு 2024 வரை 358 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 200இற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என அறிவிக்கப்பட்டது. நிலச்சரிவிலிருந்து மக்களை மீட்பதற்கு மாநில, தேசியப் பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இருந்தனர்.[12][13]
↑"DISTRICT COLLECTOR". scdd.kerala.gov.in (in ஆங்கிலம்). Retrieved 02 January 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)CS1 maint: url-status (link)
↑"District Police Chief". wayanad.keralapolice.gov.in (in ஆங்கிலம்). Retrieved 02 January 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)CS1 maint: url-status (link)
↑Annual Vital Statistics Report – 2018(PDF). Thiruvananthapuram: Department of Economics and Statistics, Government of Kerala. 2020. p. 55. Archived from the original(PDF) on 2021-11-02. Retrieved 2023-01-02.
↑"Wayanad STD codes". www.wayanad.com (in ஆங்கிலம்). Retrieved 02 January 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)CS1 maint: url-status (link)
M. K. Devassy (1965), 1961 Census Handbook- Cannanore District(PDF), Directorate of Census Operations, Kerala and The Union Territory of Laccadive, Minicoy, and Amindivi Islands
M. K. Devassy (1965), 1961 Census Handbook- Kozhikode District(PDF), Directorate of Census Operations, Kerala and The Union Territory of Laccadive, Minicoy, and Amindivi Islands