ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 (திரைப்படம்)
ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 (Harry Potter and the Deathly Hallows – Part 1) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 2007 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து 'டேவிட் யேட்ஸ்'[5] என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். இரண்டு பாகங்களாக வெளிவரும் இந்த திரைப்படங்கள் ஆரி பாட்டர் தொடரின் இறுதித் திரைப்படம் ஆகும். திரைப்படத்திற்கான புகைப்படம் எடுக்கும் நிகழ்வு 19 பெப்ரவரி 2009 இல் ஆரம்பித்து 12 சூன் 2010 வரை நடைபெற்றது. பகுதி ஒன்று ஐமாக்ஸ் வடிவில் 19 நவம்பர் 2010 இல் வெளியிடப்பட்டது. ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 படம் உலகளாவிய 977 மில்லியன் டாலர்களை வசூலித்தது, இது திரைப்படத் ஆரி பாட்டர் தொடரில் மூன்றாவது அதிக வசூல் செய்தபடமாகவும் மற்றும் 2010 ஆம் ஆண்டில் எல்லா நேரத்திலும் எட்டாவது மிக உயர்ந்த படம் ஆகும். இது சிறந்த தயாரிப்பு மற்றும் சிறந்த திரை வண்ணம் போன்ற அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 (திரைப்படம்)
|
Portal di Ensiklopedia Dunia